வெங்கடேஷ் ஐயர் முதல் ஒருநாள் போட்டியில் பந்துவீசாதது ஏன்? – ஷிகர் தவான் கொடுத்த விளக்கம்

Venkatesh
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. அதுமட்டுமின்றி இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியின் போது தென்ஆப்பிரிக்க அணி சார்பாக பேட்டிங் செய்த கேப்டன் பவுமா மற்றும் வேண்டர் டுசைன் ஆகியோர் சதம் அடித்து தங்களது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

Rahul-toss

- Advertisement -

முழுவதுமாக 50 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் இந்திய அணியால் வெறும் 4 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்த முடிந்தது. அதிலும் ஒரு விக்கெட் ரன் அவுட் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இந்த போட்டியில் இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சாளர்கள் இருந்தும் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களை வீழ்த்த முடியாமல் பவுலர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

இந்நிலையில் இந்த போட்டியில் ஆல்-ரவுண்டராக இந்திய அணிக்கு அறிமுகமான வெங்கடேஷ் ஐயருக்கு ஒரு ஓவர் கூட பந்து வீச வாய்ப்பளிக்காதது தற்போது பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் ஆல்-ரவுண்டராக இந்திய அணியில் நேற்று களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் 5 பவுலர்கள் விக்கெட் எடுக்க திணறியும் இறுதிவரை வாய்ப்பு கிடைக்காமல் பீல்டிங் செய்து கொண்டிருந்தார்.

venkatesh 1

இந்நிலையில் இப்படி வெங்கடேஷ் ஐயர் பந்து வீசாதது ஏன் என்பது குறித்து அணியின் சீனியர் வீரர் ஷிகர் தவான் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த மைதானத்தில் நல்ல டர்ன் இருந்தது. இதன் காரணமாக சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். மேலும் மிடில் ஓவர்களில் விக்கெட் விழாத போது மீண்டும் முக்கியமான பந்துவீச்சாளர்களை கொண்டுவரவேண்டும். அதன்படியே அவர்களை ரொட்டேட் செய்தால் இறுதி வரை அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது.

- Advertisement -

இதையும் படிங்க : நேற்றைய போட்டியில் சச்சின் மற்றும் பாண்டிங் சாதனையை சேர்த்து காலி செய்த விராட் கோலி – விவரம் இதோ

சூழ்நிலைக்கு ஏற்ப விளையாட வேண்டும் என்பது அணிக்கு மிகவும் அவசியம். அந்த வகையில் அணிக்காக யோசித்து பவுலர்கள் சுழற்சி முறையில் பந்து வீச அழைக்கப்பட்டனர். ஒருவேளை சூழ்நிலை நமக்கு சாதகமாக இருந்திருந்தால் வெங்கடேஷ் ஐயருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம். இதை பெரிது படுத்த வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement