முதல் போட்டியில் நிறைய தப்பு பண்ணிட்டோம். ஆனாலும் – தொடர் வெற்றி குறித்து ஷிகார் தவான் மகிழ்ச்சி

dhawan 1
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நேற்றுடன் முடிவுக்கு வந்தது. ஏற்கனவே இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் இரண்டு அணிகளுமே தலா ஒரு வெற்றியினை பெற்று தொடரில் சமநிலை வகித்த வேளையில் நேற்று இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று டெல்லி அருண் ஜேட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷிகார் தவான் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.

David-Miller

அதன்படி முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 27.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 99 ரன்களை மட்டுமே குவித்தது. அதிகபட்சமாக கிளாசன் 34 ரன்கள் குவித்தார். அவரை தவிர்த்து வேறு எந்த வீரரும் 15 ரன்களை கூட தாண்டவில்லை. அதனை தொடர்ந்து 100 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 19.1 ஓவரில் மூன்று விக்கெட்டை இழந்து 105 ரன்கள் குவித்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக சுப்மன் கில் 49 ரன்கள் அடித்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணியானது இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்கிற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் போட்டி முடிந்து இந்த தொடரின் வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ஷிகார் தவான் கூறுகையில் :

INd vs SA Shubman Gill Dhawan

இந்த தொடரில் எங்கள் அணி வீரர்கள் விளையாடிய விதத்தை நினைத்து உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். இளம் வீரர்களாகிய அவர்கள் அனைவரும் தங்களது பொறுப்பை உணர்ந்து சரியான முதிர்ச்சியை இந்த தொடரில் வெளிப்படுத்தினர். இந்த தொடரில் எங்களுடன் இருந்த சப்போர்ட் ஸ்டாப்புகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.

- Advertisement -

முதல் போட்டியில் நாங்கள் மிக மோசமாகவே செயல்பட்டோம். எளிதான பல கேட்ச்களை தவறவிட்டோம். பீல்டிங்கிலும் குறைபாடு இருந்தது. இப்படி நிறைய தவறுகள் நடந்தும் எங்கள் மீது அழுத்தத்தை நாங்கள் ஏற்படுத்திக்கொள்ளவில்லை. நிச்சயம் சிறப்பான செயல்பாட்டுக்கு திரும்புவோம் என்று நினைத்துக் கொண்டே எங்களது பணிகளைத் தொடர்ந்து வந்தோம். அந்த வகையில் இந்தத் தொடரில் விளையாடியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

இதையும் படிங்க : டி20 உலககோப்பை வரலாற்றில் மாயாஜால ஹாட்ரிக் எடுத்த 4 பவுலர்களின் பட்டியல்

இந்த அணியில் என்னுடைய பங்கும் நிச்சயம் அவசியம் என்பது எனக்கு தெரியும். அந்த வகையில் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை இனி வெளிப்படுத்துவேன். கடினமான ஆடுகளங்களில் கூட நிச்சயம் இந்த அணியால் சிறப்பாக செயல்பட முடியும். பந்துவீச்சாளர்கள் இந்த போட்டியில் மிக அற்புதமாக செயல்பட்டனர் என தொடரின் வெற்றி குறித்து ஷிகார் தவான் மகிழ்ச்சி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement