நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. அதில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும் இந்தியா அடுத்தடுத்து பரிதாபமாக தோற்றுள்ளது. அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக ஒரு தொடரில் இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது.
அது போக 12 வருடங்கள் கழித்து முதல் முறையாக சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் இந்தியா தோல்வியை பதிவு செய்துள்ளது. இந்த தோல்விக்கு பேட்டிங்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத ரோகித் சர்மா கேப்டனாகவும் சுமாராக செயல்பட்டது முக்கிய காரணமானது. அதனால் தற்சமயத்தில் பலரும் அவரை விமர்சித்து வருகிறார்கள்.
தவான் ஆதரவு:
இந்நிலையில் ஒரு மோசமான தோல்வியால் ரோஹித் சர்மாவை விமர்சிப்பவர்கள் அவர் இந்திய அணியில் ஏற்படுத்தியுள்ள நல்ல அழுத்தமான தொடர்பையும் பார்க்க வேண்டும் என்று ஷிகர் தவான் ஆதரவு தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நீங்கள் பேசும் அழுத்தம் பற்றிய விஷயங்களை நாங்கள் உணர்வதில்லை. கிரிக்கெட்டில் எப்போதும் அழுத்தம் இருக்கும். ஆனால் நாங்கள் அதில் சந்திக்கும் வெற்றி தோல்விகளுக்காக அழுத்தத்தில் வசிப்பதில்லை”
“ஏனெனில் விளையாட்டில் வெற்றி தோல்வி என்பது ஒரு அங்கம். அது நியாயமான அல்லது நடைமுறையில் முன்னோக்கி செல்வதற்கு சாத்தியமான வழியாக நான் கருதவில்லை. கிரிக்கெட்டர்களாக நாங்கள் அதிகமாக சிந்திப்பதில்லை. ரோகித் சர்மா சிறந்த கேப்டன். இது வெற்றி தோல்வியை சந்திப்பதை மட்டும் பொருத்ததல்ல. அணிக்குள் ஒரு ஆழமான தொடர்பு இருக்கும்”
நல்ல ஒற்றுமை தொடர்பு:
“அதனால் அணியில் இருக்கும் வீரர்கள் தங்களுடைய கேப்டனுடன் எந்தளவுக்கு தொடர்பு வைத்துள்ளார்கள், அவர்கள் கேப்டனை எப்படி பார்க்கிறார்கள் என்பது முக்கியம்” என்று கூறினார். அதாவது வெற்றி தோல்வியை தாண்டி அணியில் ஒற்றுமையாக இந்திய அவசியம் என்று தவான் தெரிவித்துள்ளார். அதை இந்திய அணியில் சரியாக செய்துள்ள ரோஹித் சர்மா எப்போதுமே நல்ல கேப்டன் என்று ஷிகர் தவான் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஒரு பக்கம் விராட் கோலி ஆஸியில் நெருப்பா ஆடுவாரு.. மறுபக்கம் இந்தியாவுக்கு அவர் தேவை.. எம்எஸ்கே பிரசாத்
அவர் கூறுவது போல அணியில் நல்ல தொடர்பு இருப்பதாலேயே ரோகித் சர்மா தலைமையில் இந்தியா 2024 டி20 உலகக் கோப்பை வென்றது. சமீபத்தில் கான்பூரில் வங்கதேசத்துக்கு எதிராக அசாத்தியமான வெற்றியையும் பதிவு செய்தது. மேலும் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் ரோஹித் சர்மா இல்லையென்றாலும் இந்தியா நன்றாக விளையாடி வெற்றி பெறும் என்றும் தவான் நம்பிக்கை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.



