ஒரு பக்கம் விராட் கோலி ஆஸியில் நெருப்பா ஆடுவாரு.. மறுபக்கம் இந்தியாவுக்கு அவர் தேவை.. எம்எஸ்கே பிரசாத்

MSK Prasad 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆஸ்திரேலிய மண்ணில் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய 2 தொடர்களையும் இந்தியா அடுத்தடுத்து வென்று வரலாறு படைத்தது. அதே வரிசையில் இம்முறையும் ஆஸ்திரேலியாவில் வென்று ஹாட்ரிக் வெற்றியை இந்தியா பெறுமா என்பதை பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

அந்தத் தொடரில் விளையாடுவதற்கான இந்திய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் முகமது ஷமி காயத்தால் தேர்வு செய்யப்படாதது இந்தியாவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அந்த அணியில் புஜாரா தேர்வு செய்யப்படாதது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என்று முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் கூறியுள்ளார்.

- Advertisement -

நெருப்பும் நிதானமும்:

2018 – 19 பார்டர் – கவாஸ்கர் கோப்பையை ஆஸ்திரேலியாவில் விராட் கோலி தலைமையில் இந்தியா வெல்வதற்கு புஜாரா 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து தொடர்நாயகன் விருது வென்று முக்கிய பங்காற்றினார். அதே போல 2020 – 21 தொடரிலும் பாறையை போல் உடம்பில் அடி வாங்கிய அவர் நிறைய பந்துகளை எதிர்கொண்டு இந்தியாவின் வெற்றியில் கருப்பு குதிரையாக சென்று விட்டார். ஆனால் அதன் பின் சுமாராக விளையாடியதால் கழற்றி விடப்பட்ட புஜாரா சமீபத்தில் ரஞ்சிக்கோப்பையில் இரட்டை சதமடித்தார்.

அந்த சூழ்நிலையில் விராட் கோலி போன்ற பேட்ஸ்மேன்கள் ஒரு பக்கம் நெருப்பாக விளையாடினால் மறுபுறம் நங்கூரமாக விளையாடி கை கொடுக்க புஜாரா அவசியம் என்று பிரசாத் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “2018இல் வெளிப்படுத்திய செயல்பாடுகளை நீங்கள் பார்க்க வேண்டும். அப்போது ஒரு பக்கம் விராட் கோலி அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்”

- Advertisement -

விராட் கோலியின் ஃபார்ம்:

“மறுபக்கம் புஜாரா கோட்டையை தாங்கிப் பிடித்தார். எனவே அந்த இருவரின் ஜாக்கிரதை மற்றும் ஆக்ரோசம் ஆகிய ஸ்டைல் தற்போதைய அணியில் இல்லை. புஜாரா ஒரு பக்கம் திடமாக விளையாடுவார். மறுபக்கம் விராட் கோலி ஆக்ரோஷமாக ரன்கள் குவிப்பார். அப்படி விளையாடக்கூடிய விராட் கோலி மற்ற வீரர்களுக்கு உத்வேகத்தை கொடுப்பார்”

இதையும் படிங்க: பும்ராவிடம் அந்த எல்லா ஸ்பெஷல் திறமையும் இருக்கும்.. ஆல் டைம் ஆல் ஃபார்மட் பவுலரா வருவாரு.. மேக்ஸ்வெல்

“அப்படிப்பட்ட விராட் கோலியின் தற்போதைய ஃபார்ம் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெற வேண்டிய கட்டாய சூழ்நிலையில் கவலையளிக்க கூடியதாக இருக்கிறது” என்று கூறினார். இருப்பினும் ஆஸ்திரேலியாவில் விராட் கோலி நன்றாக விளையாடுவார் என்று மற்றொரு முன்னாள் இந்திய தேர்வுக் குழு உறுப்பினர் சுனில் ஜோசி நம்பிக்கை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement