பும்ராவிடம் அந்த எல்லா ஸ்பெஷல் திறமையும் இருக்கும்.. ஆல் டைம் ஆல் ஃபார்மட் பவுலரா வருவாரு.. மேக்ஸ்வெல்

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜஸ்ப்ரித் பும்ரா செயல்பட்டு வருகிறார். 2016இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் தன்னுடைய வித்தியாசமான பவுலிங் ஆக்சன் வைத்து எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுத்தார். இருப்பினும் இந்த பவுலிங் ஆக்சனை வைத்துக்கொண்டு அவரால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்க முடியாது என்ற விமர்சனங்கள் எழுந்தன.

ஆனால் 2018இல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அறிமுகமான பும்ரா 2019இல் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்து இப்போது முதல் சிறப்பாக விளையாடி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். அத்துடன் 2024 டி20 உலகக் கோப்பையில் 15 விக்கெட் எடுத்த அவர் 17 வருடங்கள் கழித்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். அதனால் தொடர்நாயகன் விருது வென்ற அவர் உலகின் சிறந்த பவுலராக செயல்படுவதாக பலரும் பாராட்டி வருகிறார்கள்.

- Advertisement -

சிறந்த பவுலர்:

இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா தாம் எதிர்கொண்டதிலேயே சிறந்த கடினமான சவாலை கொடுத்த பவுலர் என்று ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் கிளன் மேக்ஸ்வெல் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நான் எதிர்கொண்டதிலேயே மிகவும் சிறந்த பவுலர் பும்ராவாக இருப்பார். அவர் இந்த உலகிலேயே சிறந்த ஆல் ஃபார்மட் ஆல் டைம் சிறந்த பவுலராக வருவார் என்று நான் நினைக்கிறேன்”

“அவருடைய ரிலீஸ் பாயிண்ட் அதாவது கையிலிருந்து பந்தை
வெளியிடும் இடம் மிகவும் வித்தியாசமானது. ஏனெனில் அவர் பந்தை தம்முடைய உடலுக்கு முன்பாக வெளியிடுகிறார். அதனால் அவர் தாம் விரும்பும் விஷயத்தை கடைசி நொடியில் மாற்றும் திறமை கொண்டதாக கருதுகிறேன். அவரிடம் பந்தை மெதுவாகவும், அற்புதமான யார்கர் பந்துகளையும், பந்தை இருபக்கமும் ஸ்விங் செய்யும் நம்ப முடியாத திறமை இருக்கிறது”

- Advertisement -

நம்பர் ஒன் பும்ரா:

“அவரிடம் நல்ல மணிக்கட்டு இருக்கிறது. அந்த வகையில் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக இருப்பதற்கு தேவையான அனைத்து தந்திரங்களையும் அவர் கொண்டுள்ளார் என்று நினைக்கிறேன்” என கூறினார். அவர் கூறுவது போல தனித்துவமான பவுலிங் ஆக்சனை வைத்து அசத்தும் பும்ரா உலகின் சிறந்த பவுலராக இருப்பதாக வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் போன்ற பல ஜாம்பவான்களும் பாராட்டியுள்ளனர்.

இதையும் படிங்க: காயத்தால் அல்ல.. ஜடேஜா, துபேவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவே 8வது இடத்தில் ஆடுனேன்.. சுயநலமற்ற தோனி பேட்டி

அப்படி சிறப்பாக விளையாடி வரும் அவர் வரலாற்றிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்த முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளராக சமீபத்தில் சாதனை படைத்தார். இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதில் இந்தியா மீண்டும் வெற்றி பெற அவர் முக்கிய பங்காற்றுவார் என்று எதிர்பார்ப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement