அறிமுக போட்டியிலேயே டக் அவுட்டான என்னை தோனி மாதிரி வருவேன்னு சொன்னாரு – முன்னாள் இந்திய வீரரை பாராட்டும் தவான்

Dhawan
- Advertisement -

நட்சத்திர இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் கடந்த 2010ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானாலும் ஆரம்ப காலங்களில் மிடில் ஆர்டரில் விளையாடும் வாய்ப்பை பெற்று தடுமாற்றமாக செயல்பட்டார். ஆனால் இங்கிலாந்தில் நடைபெற்ற 2013 சாம்பியன்ஸ் டிராபியில் ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பை அப்போதைய கேப்டன் தோனி கொடுத்ததை இறுக்கமாக பிடித்து அதிக ரன்கள் குவித்து தங்க பேட் விருது வென்ற அவர் இந்தியா கோப்பை வெல்ல முக்கிய பங்காற்றி நிலையான இடத்தை பிடித்தார்.

Virat Kohli Shikhar Dhawan

- Advertisement -

அப்போதிலிருந்து 2015 உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராக 2017 சாம்பியன்ஸ் டிராபியில் மீண்டும் தங்க பேட் விருது மற்றும் 2018 ஆசிய கோப்பையில் தொடர் நாயகன் விருதுகளை வென்று அழுத்தமான பெரிய தொடர்களில் அசால்டாக அசத்திய அவரை ரசிகர்கள் மிஸ்டர் ஐசிசி என்று கொண்டாடுகிறார்கள். இருப்பினும் 2019 உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக காயத்துடன் சதமடித்து வெற்றி பெற வைத்து வெளியேறிய அவர் மீண்டும் குணமடைந்து வந்த பொது கேஎல் ராகுல் அந்த ஓப்பனிங் இடத்தை தனதாக்கி விட்டார்.

முதல் போட்டியிலேயே டக்:
அதனால் ஜிம்பாப்வே போன்ற கத்துக்குட்டிகளுக்கு எதிராக மட்டும் விளையாடும் வாய்ப்பை பெற்று வந்த அவர் அதிலும் சமீப காலங்களில் சுமாராக செயல்பட்டதால் மொத்தமாக கழற்றி விடப்பட்டுள்ளார். போதாக்குறைக்கு சுப்மன் கில் போன்ற அடுத்த தலைமுறை தொடக்க வீரர் வந்து விட்டதாலும் 37 வயதை தொட்டு விட்டதாலும் அவருடைய இந்திய கேரியர் முடிந்ததாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும் பல மறக்க முடியாத வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவர் உலகிலேயே தன்னுடைய அறிமுக போட்டியில் டக் அவுட்டாகி வெற்றிகரமாக செயல்பட்ட சில வீரர்களில் ஒருவராக ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.

Raina

குறிப்பாக கடந்த 2010ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் அறிமுகமான முதல் போட்டியில் சதமடிப்பேன் என்று எதிர்பார்த்ததாக தெரிவிக்கும் ஷிகர் தவான் அப்படியே நேர் மாறாக க்ளின்ட் மெக்கேவிடம் டக் அவுட்டானார். அப்போது சேவாக், கம்பீர் ஆகியோர் முதன்மை வீரர்களாக இருந்ததால் தமக்கு வாய்ப்பு கிடைக்காதோ என்று அஞ்சியதாக ஷிகர் தவான் கூறியுள்ளார். ஆனால் தோனியும் தாமும் இதே போல் டக் அவுட்டானாலும் வெற்றிகரமாக செயல்படுவதால் இதைப் பற்றி கவலைப்படாமல் இதை ஒரு அதிர்ஷ்டமாக நினைக்குமாறு சுரேஷ் ரெய்னா ஆறுதல் கூறியதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இளம் வீரராக நான் எப்போதும் இந்தியாவுக்காக விளையாடுவதை காணவாக வைத்திருந்தேன். அந்த வாய்ப்பு கிடைத்த போது இரவு முழுவதும் நான் தூங்கவில்லை. குறிப்பாக முதல் போட்டியில் விளையாட காத்திருந்த என்னை மழை வந்து முதல் போட்டியை மொத்தமாக ரத்து செய்ய வைத்து மேலும் காத்திருக்க வைத்தது. இருப்பினும் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2வது போட்டியில் நான் அறிமுகமானேன். அப்போட்டியில் நாங்கள் முதலில் ஃபீல்டிங் செய்த போது ஸ்லிப், மிட் ஆஃப் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் நான் ஆவலுடன் செயல்பட்டேன்”

dhawan 1

“ஆனால் பேட்டிங் செய்ய களமிறங்கிய போது 2வது ஓவரிலேயே நான் க்ளீன் போல்ட்டானேன். அப்போது “100 ரன்கள் அடிக்கலாம் என்று நினைத்து நாம் கடைசியில் 0 ரன்னில் அவுட்டாகி விட்டோமே” என்ற எண்ணத்துடன் சிரித்துக் கொண்டே பெவிலியன் திரும்பினேன். அப்போது சுரேஷ் ரெய்னா அங்கே இருந்தார். அந்த நேரத்தில் என்னை விட அவர் சற்று சீனியராக இருந்தார். அந்த சமயத்தில் என்னிடம் அந்த அவர் “நானும் ஜீரோவில் தான் அவுட்டானேன். எம்எஸ் தோனியும் 0 ரன்களில் தான் அவுட்டானார்”

இதையும் படிங்க:WPL 2023 : எவ்ளோ காசு கொடுத்தீங்க? ஃபைனலில் ஜாலம் நிகழ்த்திய அம்பயர் – மும்பையை கலாய்க்கும் ரசிகர்கள், நடந்தது என்ன

“எனவே இது அதிர்ஷ்டமான ஜீரோ” என்று தெரிவித்தார். அப்போது நான் லேசாக புன்னகைத்தாலும் அடுத்ததாக வாய்ப்பு கிடைக்குமா என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஏனெனில் அந்த சமயத்தில் சேவாக் மற்றும் கம்பீர ஆகியோர் அந்த சமயத்தில் முதன்மையானவர்களாக இருந்தனர்” என்று கூறினார்.

Advertisement