மிஸ்டர் ஐசிசி என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் அழைக்கப்படும் நட்சத்திர வீரர் ஷிகர் தவான் சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக சமீபத்தில் அறிவித்தார். கடந்த 2010 – 2022 வரையிலான காலகட்டங்களில் 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடிய அவர் 10000+ ரன்கள் குவித்துள்ளார். குறிப்பாக வெள்ளைப்பந்து சிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேனாக விளையாடிய அவர் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றினார்
அதிலும் குறிப்பாக 2013 சாம்பியன்ஸ் டிராபியில் தங்க பேட் விருது வென்ற அவர் தோனி தலைமையில் இந்தியா கோப்பையை வெல்ல உதவினார். அதே போல 2017 சாம்பியன்ஸ் ட்ராபியில் மீண்டும் தங்க பேட் விருது வென்ற அவர் ஐசிசி ஒருநாள் தொடர்களில் 65.15 என்ற சராசரியை கொண்டுள்ளார். மேலும் சச்சின் – கங்குலிக்கு பின் ரோஹித் சர்மாவுடன் சேர்ந்து அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக பார்ட்னர்ஷிப் ரன்கள் அமைத்த இந்திய ஒப்பனிங் ஜோடியாக சாதனை படைத்துள்ளார்.
யுவ்ராஜ் சிங்கின் அழைப்பு:
அதே போல டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலேயே அதிவேகமாக சதமடித்த இந்திய வீரராகவும் ஷிகர் தவான் சாதனை படைத்துள்ளார். அந்த வகையில் நவீன கிரிக்கெட்டில் சிறந்த வீரர்களில் ஒருவராக விளையாடிய அவர் 38 வயதில் வருங்கால வீரர்களுக்கு வழி விட்டு ஓய்வு பெற்றுள்ளார். அவருக்கு சச்சின் டெண்டுல்கர் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
அந்த வரிசையில் இந்தியாவுக்காக பயமின்றி விளையாடி எதிரணிகளை பயமுறுத்திய நீங்கள் லெஜெண்ட்ஸ் லீக் தொடரில் தம்முடன் விளையாட வேண்டும் என்று ஜாம்பவான் யுவராஜ் சிங் கேட்டுக்கொண்டார். தற்போது அவரது அழைப்பை ஏற்றுள்ள தவான் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடும் லெஜெண்ட் லீக் தொடரில் தாமும் இணைய உள்ளதாக அறிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியுள்ளது பின்வருமாறு.
லெஜெண்ட்ஸ் லெஜெண்ட்ஸ்:
“என்னுடைய உடல் இப்போதும் விளையாட்டுக்கு தேவையான விஷயங்களை கொடுக்கும் அளவுக்கு கட்டுப்பாட்டுடன் இருக்கிறது. நான் என்னுடைய முடிவுகளில் எளிமையாக இருக்கிறேன். என்னிடம் இருந்து கிரிக்கெட்டை பிரிக்க முடியாது. அது என்னிடமிருந்து வெளியே செல்லாது. எனவே என்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து தொடர்ந்து விளையாடி ரசிகர்களை மகிழ்வித்து நினைவுகளை உருவாக்க உள்ளேன்” என்று கூறினார்.
இதையும் படிங்க: அவரை கழற்றி விட்டு சான்ஸ் கொடுத்தேன்.. என்னை தவான் தலைகுனிய வைக்கல.. சந்தீப் பாட்டில் பெருமிதம்
இதைத் லெஜெண்ட்ஸ் ந்து வரும் செப்டம்பர் மாதம் லெஜெண்ட் லீக் 2024 தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. அதில் யுவராஜ் சிங் தலைமையிலான இந்தியா லெஜெண்ட்ஸ் அணியில் ஷிகர் தவான் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணியில் சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் போன்ற நிறைய ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.



