ஐ.பி.எல் வரலாற்றில் யாரும் படைக்காத மகத்தான சாதனையை படைத்த ஷிகர் தவான் – விவரம் இதோ

- Advertisement -

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 137 ரன்கள் எடுத்தது. பிறகு ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடிய ஷிகர் தவான் ஐ.பி.எல் வரலாற்றில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.

dhawan

- Advertisement -

அதன்படி ஐ.பி.எல்லில் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கி 5000 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற மகத்தான சாதனையை படைத்தார். நேற்றைய போட்டியில் அவர் 24வது ரன்னை எடுத்தபோது இந்த சாதனையை படைத்தார். தொடர்ந்து ஆடிய ஷிகர் தவன் 45 ரன்கள் எடுத்து ராகுல் சஹாரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ஐபிஎல்லில் துவக்க ஆட்டக்காரர்களாக அதிக ரன்கள் அடித்த பட்டியலில் ஷிகர் தவானுக்கு அடுத்தபடியாக டேவிட் வார்னர், கிறிஸ் கெயில் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இருக்கின்றனர். மொத்தம் 180 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ஷிகர் தவான் 5428 ரன்கள் குவித்து ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர்களில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

dhawan

ஐபிஎல் தொடர்களில் ஷிகர் தவான் 43 அரை சதங்களையும் 2 சதங்களும் அடித்துள்ளார். மேலும் 618 பவுண்டரிகளையும் 112 சிக்ஸர்களையும் விளாசியுள்ளார். 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக அறிமுகமான ஷிகர் தவான் அதற்குப்பிறகு மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காகவும் விளையாடியுள்ளார்.

dhawan 1

இப்போது மீண்டும் டெல்லி அணிக்காக விளையாடும் போது இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். அதுமட்டுமின்றி தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடிவரும் ஷிகர் தவான் மீண்டும் இந்திய டி20 அணியில் நிரந்தர இடம்பிடித்து விளையாடுவார் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement