ஐ.பி.எல் தொடரில் விளையாட இருப்பது பிக்பாஸ் வீட்டில் இருப்பது போல இருக்குது – புலம்பிய இந்திய வீரர்

Dhawan-1

இந்த வருட ஐபிஎல் தொடர் வேறு வழியில்லாமல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. குறிப்பாக கொரோனா வைரஸ் காரணமாக ஆறு மாதங்கள் தள்ளி வைக்கப்பட்டு ஐபிஎல் தொடர் வேறு வழியின்றி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மூன்று மைதானங்களில் மட்டுமே நடக்கிறது. ஒவ்வொரு அணியும் துபாய்க்கு செல்ல தனித்தனி விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.

Dubai

அதன் பின்னர் ஆறு நாட்களில் ஒவ்வொரு அணி உறுப்பினரும் ஹோட்டல் அறையில் தங்கி இருக்க வேண்டும். அதன் பின்னர் ஆறு நாட்கள் அந்த ஹோட்டல் வளாகத்திற்குள் ஆகவே இருக்க வேண்டும். இவை எல்லாம் முடிந்து வைரஸ் டெஸ்ட் எடுக்கும் போது அவர்களுக்கு வைரஸ் இல்லை என்ற தகவல் வந்தால் மட்டுமே மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

அதனைத் தாண்டி வீரர்கள் ஊழியர்கள் பயிற்சியாளர்கள் என அனைவரும் இருக்கும் உயிர் பாதுகாப்பு வளையம் என்ற ஒரு வளையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்குள் பல்வேறு கெடுபிடிகள் இருக்கிறது. இதில் பல்வேறு விதிகளும் இருக்கிறது இந்த விதிகளைப் பின்பற்றுவதில் பலருக்கு சிக்கல் இருந்தாலும் பின்பற்றியே தீரவேண்டும் என்ற ஒரு நிலை இருக்கிறது.

csk 1

இந்நிலையில் இந்த உயிர் பாதுகாப்பு வளையத்தில் இருப்பது பிக் பாஸ் வீட்டுக்குள் இருப்பது போன்ற ஒரு அனுபவமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார் டெல்லி அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான். அவர் கூறுகையில்… எங்கள் மனநிலை தற்போது சரியாக இருக்கிறது. நம்மைச் சுற்றி அனைவரும் நல்ல நபர்களாக இருந்தால் நாமும் நல்ல நண்பர்களாக இருப்போம்.

- Advertisement -

Dhawan

ஆனால், உங்களை சுற்றி இருக்கும் பத்து நபர்களும் எதிர்மறையான எண்ணம் கொண்டவர்களாக இருந்தால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது . அதே நேரத்தில் நாங்கள் உயிர் பாதுகாப்பு வளையத்திற்குள் இருப்பது பிக்பாஸ் வீட்டைப் போன்று இருக்கிறது என்று தெரிவித்துள்ளார் ஷிக்கர் தவான்.