ரன் அவுட் செய்துவிட்டு மகிழ்ச்சியை தவான் எப்படி கொண்டாடினார் தெரியுமா ? – வீடியோ இதோ

Dhawan
- Advertisement -

டெல்லி அணி வீரரான ஷிகர் தவான் நேற்றைய பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மாயங்க் அகர்வாலை ரன் அவுட் முறையில் வெளியேற்றினார். இதில் சிறப்பு என்னவென்றால் இடதுகை பழக்கம் கொண்ட தவான் வலதுகை மூலம் த்ரோ செய்து அவுட் செய்தார். இதனை நம்பமுடியாமல் நின்ற தவான் வழக்கம்போல தனது தொடையின் மீது தட்டியவாறு விக்கெட்டினை கொண்டாடினார். இதோ அந்த வீடியோ :

- Advertisement -

நேற்று இரவு 8 மணிக்கு மொஹாலியில் நடந்த போட்டியில் பஞ்சாப் அணியும், டெல்லி அணியும் மோதின. இதில் முதலில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது டெல்லி அணி. அதன்படி முதலில் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ரன்களை குவித்தது. பஞ்சாப் அணி சார்பாக மில்லர் 43 ரன்களை குவித்தார்.

அதனை தொடர்ந்து 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்களை மட்டுமே குவித்தது. இதனால் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி சார்பாக 2.2 ஓவர்கள் வீசி 11 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Advertisement