Shikhar Dhawan : அதிகாரப்பூர்வமாக அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட தவான்

இந்த உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியின் போது ஷிகர் தவான் தனது இடது கை பெருவிரல் பகுதியில் காயம் அடைந்தார். அதனால் சில போட்டிகளில் அவர் விளையாட

Dhawan
- Advertisement -

இந்த உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியின் போது ஷிகர் தவான் தனது இடது கை பெருவிரல் பகுதியில் காயம் அடைந்தார். அதனால் சில போட்டிகளில் அவர் விளையாடமாட்டார் என்று அணி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Dhawan

- Advertisement -

அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட்டை இங்கிலாந்துக்கு அனுப்பியது பிசிசிஐ. ஆனாலும் தவான் காயம் குணமடைந்து நிச்சயம் விளையாடுவார் என்று கோலி தெரிவித்தார். அதனால் தவானுக்கு பதில் ராகுல் துவக்க வீரராகவும் விஜய் சங்கர் 4மிடில் ஆர்டரிலும் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது பிசிசிஐ முக்கிய அறிவிப்பு ஒன்றினை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி தவானின் காயம் குணமடைய ஜூலை மாதம் 15 ஆம் தேதி வரை ஆகும் என்பதால் அவரை மீதமுள்ள போட்டியில் இருந்து வெளியேற்றுகிறோம் என்று தெரிவித்துள்ளது. அதற்கு காரணம் யாதெனில் பல்வேறு வகையான சிகிச்சைகள் எடுத்து பிறகும் நிபுணர்கள் கூறிய படி தவானுக்கு காயம் குணமடைய ஜூலை மாதம் பாதி நாட்கள் வரை ஆகும் என்று தெரிவித்ததால் அவர் இந்த உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேற உள்ளார்.

Pant

ஐ.சி.சி தொடர்கள் என்றாலே தவானின் ஆட்டம் சிறப்பாக இருக்கும். அதற்கு ஏற்றாற்போல் இந்த தொடரிலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பிரமாதமான சதம் ஒன்றினையும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தவானின் இந்த விலகளால் அவரின் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். மேலும் அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட்டை இந்திய அணியில் சேர்க்க ஐசிசியிடம் இந்திய அணி நிர்வாகம் தரப்பில் வலியுறுத்தப் பட்டுள்ளது என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement