இந்திய அணியை மிஸ் பண்றேன்.. விராட் கோலி செஞ்சதை மறக்க முடியாது.. ஷிகர் தவான் நெகிழ்ச்சி

Shikhar Dhawan
- Advertisement -

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் பாகிஸ்தானில் துவங்கி நடைபெறுகிறது. அந்தத் தொடரில் இந்திய அணி தங்களுடைய போட்டிகளை துபாய் மண்ணில் விளையாட உள்ளது. மினி உலகக் கோப்பை என்று ரசிகர்களால் வர்ணிக்கப்படும் இந்தத் தொடரில் உலகின் டாப் 8 அணிகள் விளையாடுவது வாடிக்கையாகும்.

அந்த வரிசையில் இம்முறை சொந்த மண்ணில் பாகிஸ்தான் நடப்புச் சாம்பியனாக களமிறங்குகிறது. 2013 சாம்பியன்ஸ் டிராபியை தோனி தலைமையில் வென்ற இந்தியா முன்னாள் சாம்பியனாக களமிறங்க உள்ளது. முன்னதாக இங்கிலாந்தில் நடைபெற்ற 2013 சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்வதற்கு ஷிகர் அதிக ரன்கள் குவித்து தங்க பேட் மற்றும் தொடர்நாயகன் விருது வென்று முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

மிஸ் செய்றேன்:

அந்தத் தொடரில் தான் ரோகித் சர்மா – தவானை அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனி புதிய துவக்க வீரர்களாக உலகிற்கு அடையாளப்படுத்தினார். இந்நிலையில் 2013 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்ற பின் விராட் கோலி கங்னம் ஸ்டைல் நடனமாடியது மறக்க முடியாதது என ஷிகர் தவான் கூறியுள்ளார். மேலும் அந்தத் தொடரில் இந்தியாவுக்காக விளையாடிய தருணங்களை மிஸ் செய்வதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “என்னுடைய அணி வீரர்களுடன் சேர்ந்து அந்த அற்புதமான தொடரை வென்றப் பின் கோப்பையை தூக்கிய தருணத்தை எனது எஞ்சிய வாழ்நாள் முழுவதும் நினைத்து மகிழ்வேன். உண்மையாக அதை விட சிறந்த தருணம் எனக்கு இருக்க முடியாது. அதே போல விராட் கோலி வெற்றி பெற்ற பின் கங்கணம் ஸ்டைல் நடனமாடியதும் மற்றுமொரு மறக்க முடியாத நினைவாகும்”

- Advertisement -

இந்தியா அசத்துமா:

“அது மிகவும் வேடிக்கையானதாகவும் எங்கள் அனைவரையும் சிரிக்க வைப்பதாகவும் அமைந்தது. என்னுடைய கம்பேக்கில் நானும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சதத்தை அடித்தேன். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மற்றொரு போட்டியில் சதத்தை அடித்தேன். ஆனால் அதை விட இந்திய அணியுடன் நேரத்தை செலவிட்டு களத்தில் மகிழ்ச்சியுடன் நாட்டுக்காக விளையாடியதே மிகவும் ஸ்பெஷல்”

இதையும் படிங்க: சஞ்சு சாம்சன் இப்படியே ஆடுனா அவரோட இடம் ஜெய்ஸ்வாலுக்கு போயிடும் – எச்சரித்த சீக்கா ஸ்ரீகாந்த்

“அந்தத் தருணங்களை நான் மிஸ் செய்கிறேன். அவற்றை என்னுடைய இதயத்தில் எப்போதும் வைத்திருப்பேன்” எனக் கூறினார். அந்த வகையில் தவானுடன் விளையாடிய ரோகித் சர்மா தலைமையில் இம்முறை இந்திய அணி களமிறங்க உள்ளது. எனவே 12 வருடங்கள் கழித்து இந்தியா கோப்பையை வெல்லுமா என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது.

Advertisement