2016இல் உடைஞ்ச கையுடன் இந்தியாவுக்காக விளையாடியும் கழற்றி விட்டாங்க.. கடினமான நேரம் பற்றி தவான்

Shikhar Dhawan
- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்த சில வீரர்கள் டெல்லியைச் சேர்ந்த ஷிகர் தவான் ஒருவராக அறியப்படுகிறார். 2010 அறிமுகமான அவர் மிடில் ஆடரில் விளையாடி தடுமாறிக் கொண்டிருந்தார். அவருடைய திறமையை அறிந்த அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனி 2013 சாம்பியன்ஸ் டிராபியில் துவக்க வீரராக விளையாடும் வாய்ப்பை கொடுத்தார்.

அந்த வாய்ப்பில் தங்க பேட் விருது வென்ற தவான் இந்தியா கோப்பையை வெல்ல உதவினார். அத்துடன் ரோகித் சர்மாவுடன் சேர்ந்து மிகச்சிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேனாக விளையாடிய அவர் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றினார். குறிப்பாக 2017 சாம்பியன்ஸ் டிராபியில் மீண்டும் தங்க பேட் விருது பெற்ற அவர் இந்தியா ஃபைனல் வரை செல்ல உதவினார்.

- Advertisement -

கடினமான காலம்:

2019 உலகக் கோப்பையில் காயத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதத்தை அடித்த தவான் இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார். ஆனால் அந்த காயத்திலிருந்து மீண்டு வந்த அவர் தடுமாற்றமாக விளையாடினார். மறுபுறம் அவருக்கு போட்டியாக கில், ஜெய்ஸ்வால் போன்ற அடுத்த தலைமுறை இளம் வீரர்கள் வந்து விட்டனர். அதனால் கடந்த வருடம் தவான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்நிலையில் 2013ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி முதல் போட்டியிலேயே வேகமான சதத்தை அடித்து உலக சாதனை படைத்த தவான் தம்முடைய கேரியரில் சந்தித்த கடினமான தருணத்தை பகிர்ந்துள்ளார். 2016 கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக காயத்துடன் விளையாடியும் இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்டது அவர் நினைவு கூர்ந்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் தவான் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

காயத்துடன் விளையாடியும்:

“அவநம்பிக்கையுடன் இருந்ததே எனது கேரியரின் மோசமான தருணம். அப்போது ரன்கள் அடிக்காமல் போனால் இந்திய அணியிலிருந்து புறக்கணிக்கப்படுவேன் என்பது எனக்குத் தெரிந்திருந்தது. கொல்கத்தாவில் நியூசிலாந்துக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் அவுட்டான நான் 2வது இன்னிங்ஸில் ட்ரெண்ட் போல்ட் பந்தில் காயத்தை சந்தித்தேன். அது என்னுடைய கையை உடைத்தது”

“அந்த இன்னிங்ஸில் உட்கார்ந்தால் அத்துடன் அணியிலிருந்து வெளியே செல்ல வேண்டும் என்பது எனக்குத் தெரியும். எனவே நான் விளையாடிப் பார்க்கிறேன் அல்லது களத்திலேயே இறக்கிறேன் என்று முடிவெடுத்தேன். அந்த எண்ணத்துடன் உடைந்த கையுடன் சென்ற நான் 15 – 20 ரன்களை மட்டுமே எடுத்ததால் டெஸ்ட் அணியிலிருந்து கழற்றி விடப்பட்டேன்”

இதையும் படிங்க: ரோஹித், கோலிக்கு பின் இந்த 2 பசங்க இந்தியாவின் வருங்காலமா இருப்பாங்க.. தாக்கூர் பேட்டி

“அப்போது தான் நான் கடினமாக உழைத்தும் அவநம்பிக்கையுடன் செயல்பட்டதால் வெற்றிகள் கிடைக்கவில்லை என்பதை உணர்ந்தேன். அதனால் வாழ்க்கையில் என்ன முக்கியம்? என்று என்னிடம் கேட்டேன். மகிழ்ச்சி தான் முக்கியம். அப்போதிலிருந்து மகிழ்ச்சியுடன் இருக்கத் துவங்கினேன். முதல் போட்டியிலேயே உலக சாதனையை படைத்த நான் நாளடைவில் உலகத்தின் ஓட்டம் எப்போதும் நிற்காது, எப்போதும் உங்களுக்கு போட்டியாக ஓட்டத்தில் ஒருவர் இருப்பார் என்பதை உணர்ந்தேன்” என்று கூறினார்.

Advertisement