ரோஹித், கோலிக்கு பின் இந்த 2 பசங்க இந்தியாவின் வருங்காலமா இருப்பாங்க.. தாக்கூர் பேட்டி

Shardhul Thakur
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. சமீபத்தில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்து ஓய்வு பெற்றனர். அவர்களது ஓய்வுக்குப் பின் நடைபெறும் இந்தத் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் சுப்மன் கில் புதிய கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையில் சாய் சுதர்சன் உள்ளிட்ட இளம் வீரர்கள் தேர்வாகியுள்ளனர்.

அதே போல 2017ஆம் ஆண்டு கழற்றி விடப்பட்ட கருண் நாயர் உள்ளூரில் போராடி கம்பேக் கொடுத்துள்ளார். அவரைப் போலவே வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் சர்துள் தாக்கூர் உள்ளூரில் கடுமையாக போராடி மீண்டும் இந்திய அணியில் தேர்வாகியுள்ளார். 2021 இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அபாரமாக செயல்பட்ட அவர் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியை வெல்ல உதவினார்.

- Advertisement -

இந்தியாவின் வருங்காலம்:

அதற்கு முன் 2021 காபா டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய அவர் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியாவின் சரித்திர வெற்றிக்கு உதவினார். அதன் பின் தடுமாற்றமாக விளையாடியதால் கழற்றி விடப்பட்ட தாக்கூர் கடந்த ரஞ்சிக் கோப்பையில் மும்பைக்காக சிறப்பாக விளையாடியதன் காரணமாக மீண்டும் தேர்வாகியுள்ளார்.

இந்நிலையில் புதிய கேப்டன் சுப்மன் கில், துணை கேப்டன் ரிஷப் பண்ட் ஆகியோர் ரோஹித், கோலிக்கு பின் இந்திய அணியின் வருங்காலமாக இருப்பார்கள் என்று சர்துள் தாக்கூர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “மிகப்பெரிய வீரர்களாக இருக்கும் அவர்கள் இருவருமே இந்தியாவின் வருங்காலமாக இருப்பார்கள். அவர்கள் இருவருமே வித்தியாசமான கேரக்டரை கொண்டவர்கள்”

- Advertisement -

தாக்கூர் நம்பிக்கை:

“விளையாட்டு என்று வரும் போது சுப்மன் கில் மிகவும் சீரியசான பொறுமையான அமைதியான நபர். ஆனால் ரிஷப் மிகவும் வேடிக்கையான உயிரோட்டமான நபர். அதே சமயம் அணிக்காக அவர்கள் தங்களுடைய சொந்த வழியில் செயல்படக்கூடிய திறமையை கொண்டுள்ளனர். அவர்கள் இதற்கு முன் மிகப்பெரிய மற்றும் அழுத்தமான சூழ்நிலைகளில் இந்திய அணிக்கு பங்காற்றியுள்ளனர்”

இதையும் படிங்க: 18 வருடமும் 500 ரன்ஸ்.. அவங்க எல்லாருக்கும் கிங் கோலி எடுத்துக்காட்டா இருக்காரு.. டிகே பாராட்டு

“அதுவே அவர்களை இந்திய அணியின் வருங்காலமாக இருப்பார்கள் என்ற உறுதியைக் கொடுக்கிறது” என்று கூறினார். இதைத் தொடர்ந்து ஜூன் மாதம் இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இந்திய விளையாட உள்ளது. அத்தொடர் 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement