5 வருடத்தில் 100 சதங்கள்.. விராட், ரோஹித்துடன் சேர்ந்து உலகில் ராஜாங்கம் நடத்தியது பற்றி தவான் பேட்டி

Shikhar Dhawan 2
- Advertisement -

சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் ஷிகர் தவான் அறிவித்துள்ளது பல ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. ஏனெனில் 2010ஆம் ஆண்டு இந்தியாவுக்காக அறிமுகமான அவர் ஆரம்ப காலங்களில் மிடில் ஆர்டரில் தடுமாற்றமாக விளையாடினார். இருப்பினும் 2013 சாம்பியன்ஸ் டிராபியில் அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனி அவரை ரோஹித் சர்மாவுடன் துவக்க வீரராக களமிறக்கினார்.

அந்த வாய்ப்பை பொன்னாக மாற்றி கோல்டன் பேட் விருது வென்ற ஷிகர் தவான் இந்தியா 2013 சாம்பியன்ஸ் ட்ராபியை வெல்ல உதவினார். அத்துடன் 2015 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த அவர் மீண்டும் 2017 சாம்பியன்ஸ் டிராபியில் தங்க பேட் விருது வென்று இந்தியா ஃபைனல் வரை செல்ல முக்கிய பங்காற்றினார். அப்படியே 2018 ஆசியக் கோப்பையில் தொடர்நாயகன் விருது வென்ற அவர் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார்.

- Advertisement -

விடைபெற்ற தவான்:

அதன் பின் 2019 உலகக் கோப்பையில் அவர் காயத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். ஆனால் அந்த காயத்திலிருந்து குணமடைந்த பின் அதிரடியாக விளையாடத் தடுமாறிய அவரை பிசிசிஐ கொஞ்சம் கொஞ்சமாக கழற்றி விட்டது. எனவே ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்கள் தற்போது வந்து விட்டதால் தமக்கு வாய்ப்பு கிடைக்காது என்பதை உணர்ந்த தவான் 38 வயதில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் 2013 – 2019 காலகட்டங்களில் உலக கிரிக்கெட்டில் ராஜாங்கம் நடத்திய விராட் கோலி (49), ரோஹித் சர்மா (31), தவான் (23) ஆகியோர் மொத்தமாக 103 சதங்கள் விளாசி இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்தனர். அந்தக் காலங்களை மறக்க முடியாது என்று தெரிவிக்கும் தவான் அது பற்றி நினைவு கூர்ந்தது பின்வருமாறு.

- Advertisement -

5 வருடத்தில் 100 சதங்கள்:

“டங்கன் ப்ளக்ச்சர், சஞ்சய் பங்கர், விக்ரம் ரத்தோர், ராகுல் டிராவிட், ரவி சாஸ்திரி போன்ற நிறைய பயிற்சியாளர்கள் எனது கேரியரில் அங்கமாக இருந்தனர். அவர்கள் அனைவருடனும் இணைந்து வேலை செய்ததற்கு நன்றி உடையவனாக இருக்கிறேன். விராட், ரோஹித்துடன் எனது பயணம் அழகாக இருந்தது. விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் நான் சேர்ந்து 5 வருடங்களில் 100 சதங்கள் அடித்தது இன்னும் தெளிவாக நினைவில் இருக்கிறது”

இதையும் படிங்க: ஆதரவு கொடுத்த என்னோட கேப்டன் தோனிக்கு நன்றி.. தனது கேரியரின் சிறந்த 3 இன்னிங்ஸ் பற்றி தவான் பேட்டி

“அப்போது ரவி சாஸ்திரி எங்கள் பயிற்சியாளராக இருந்தார். நான் காயத்தை சந்தித்த போது என்.சி.ஏ, பிசிசிஐ மீண்டு வர முக்கிய காரணமாக இருந்தார்கள். அவர்களுக்கும் நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன்” என்று கூறினார். அந்த வகையில் இந்தியாவின் மிஸ்டர் ஐசிசி பெயருடன் கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து விடை பெற்ற தவானுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

Advertisement