இந்திய கிரிக்கெட் அணிக்காக கடந்த தசாபத்தில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் டாப் 3 இடங்களில் விளையாடிய அவர்கள் நிறைய ரன்கள் மற்றும் சதங்கள் அடித்து இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்கற்றினார்கள். அதில் விராட் கோலி மற்றும் தவான் ஆகியோர் டெல்லியை சேர்ந்தவர்கள்.
உள்ளூரில் ஒரே அணிக்காக விளையாடிய அவர்கள் நாளடைவில் இந்திய அணிக்காகவும் ஜோடி சேர்ந்து நிறைய போட்டிகளில் விளையாடியதை ரசிகர்களால் மறக்க முடியாது. இந்நிலையில் இந்திய அணிக்காக விளையாடும் போது ஒருமுறை தமக்கும் விராட் கோலிக்கும் கடுமையான சண்டை உண்டானதாக தவான் தெரிவித்துள்ளார். அதற்காக கோபப்பட்ட தாங்கள் தோளில் இடித்து மோதிக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
விராட் கோலியுடன் சண்டை:
மற்றொரு தருணத்தில் ஐபிஎல் ஏலத்தில் தம்முடைய சம்பளம் குறைந்திருந்ததாக தவான் கூறினார். அப்போது தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ஒரு போட்டியில் தம்மை ரன் அவுட் செய்து விட்டதற்காக விராட் கோலியை கோபமடைந்து திட்டியதாகவும் தவான் கூறியுள்ளார். இருப்பினும் ஒரே அணிக்காக விளையாடும் வீரர்கள் இடையே இதெல்லாம் சகஜம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.
“ஒருமுறை நானும் விராட் கோலியும் சண்டையிட்டோம். பயிற்சியில் கால்பந்தாட்டம் விளையாடும் போது நாங்கள் தோள்பட்டையால் தாக்கிக் கொண்டும். ஒரு நொடி எங்களுக்கு கோபம் வந்தது. அதனால் மெதுவாக கால்பந்து விளையாடுவதை நிறுத்தினோம். ஏனெனில் அதைப் பார்த்து அருகில் இருப்பவர்களும் சண்டையிடக்கூடும். இப்படியெல்லாம் நடக்கும்”
விராட் கோலியை திட்டினோம்:
“விளையாட்டில் இருக்கும் பல வீரர்கள் ஆக்ரோஷமானவர்கள். ஒவ்வொருவரும் அவரவர் உரிமையைப் பெரியவர்கள். அதே போல தென்னாப்பிரிக்காவில் விளையாடும் போது விராட் என்னை ரன் அவுட்டாக்கினார். அந்த நேரத்தில் நான் மிகவும் கோபமடைந்தேன். ஏற்கனவே ஐபிஎல் ஏலமும் எனக்கு சரியாக அமையவில்லை. அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை”
இதையும் படிங்க: பாகிஸ்தான் நற்பெயரை அழித்த நக்வியிடம்.. எதுக்கு ஜெய்ச்ச இந்தியா போகனும்? கடைமையை செய்ங்க.. மதன் லால்
“அந்த சூழ்நிலையில் ரன் அவுட் நடந்தது. அதனால் கோபப்பட்ட நான் நிறைய துஸ்பிரயோகம் செய்தேன். விராட் கோலி களத்தில் இருந்தார். நான் பெவிலியன் நோக்கி சென்று கொண்டிருந்தேன். அவரை நோக்கியல்ல. இருப்பினும் ரன் அவுட்டாகும் பேட்ஸ்மேன்கள் அப்படி செய்வது வழக்கம். அது வேண்டுமென்றே செய்யப்படவில்லை என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம். கிரிக்கெட்டில் இவ்வாறு நடக்கும்” என்று கூறினார்.



