IND vs WI : இவ்ளோ நல்லா ஆடிட்டு கடைசில இப்படியா நடக்கனும் – ஷிகர் தவானால் ரசிகர்கள் வருத்தம்

Dhawan-1
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி டிரினிடாட் நகரில் உள்ள குயின்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரான் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்ததால் இந்திய அணி முதலில் விளையாடியது.

அதன்படி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்களை குவிக்கவே தற்போது 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணியானது தங்களது ஆட்டத்தை விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்த போட்டியில் துவக்க வீரர்களாக களமிறங்க ஷிகார் தவான் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து முதல் விக்கெட்டுக்கு 119 ரன்களை சேர்த்தனர். துவக்க வீரராக களமிறங்கிய கில் 64 ரன்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 54 ரன்களையும் குவித்து அசத்தினர்.

அதேபோன்று இந்த போட்டியில் கேப்டன் ஷிகர் தவான் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி 99 பந்துகளில் 10 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 97 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். சமீப காலமாகவே டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓரங்கட்டப்பட்டு வரும் தவான் ஒருநாள் கிரிக்கெட்டில் மிகுந்த அனுபவம் வாய்ந்தவர் என்பதனால் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

- Advertisement -

அதோடு இந்திய அணியின் முதன்மை கேப்டனான ரோகித் சர்மா தற்போது இந்த தொடரில் ஓய்வில் உள்ளதால் அவருக்கு பதிலாக கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ள தவான் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதையும் படிங்க : விராட் கோலியின் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவிற்கு கிடைக்கும் வருமானம் எவ்வளவு தெரியுமா? – பாருங்க மயக்கமே வரும்

நிச்சயம் சிறப்பான சதத்தை அடித்து பெரிய ரன்குவிப்பிற்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இறுதியில் அவர் மூன்று ரன்கள் வித்தியாசத்தில் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement