விராட் கோலியின் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவிற்கு கிடைக்கும் வருமானம் எவ்வளவு தெரியுமா? – பாருங்க மயக்கமே வரும்

Kohli-1
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். கடந்த 2008 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகிய விராட் கோலி இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்களை விளாசியுள்ளார். கடைசியாக 2019 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடித்த விராட் கோலி அதன் பிறகு இரண்டு ஆண்டுகளாக சதம் அடிக்காமல் இருந்து வருகிறார்.

Kohli

- Advertisement -

இதனால் அவர் மீது ஒருபுறம் விமர்சனம் இருந்தாலும் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் ஒரு மாபெரும் வீரராக பார்க்கப்பட்டு வருகிறார். இந்திய கிரிக்கெட் அணிக்காக இதுவரை 102 டெஸ்ட் போட்டிகள், 262 ஒருநாள் போட்டிகள் மற்றும் 99 டி20 போட்டிகளிலும் பங்கேற்று 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களை குவித்து அசத்தியுள்ளார்.

மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் ஏகப்பட்ட சாதனைகளை தன் வசம் வைத்திருக்கும் விராட் கோலி ஐபிஎல் தொடரிலும் 223 போட்டிகளில் விளையாடி 6600-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார்.

Kohli-2

இப்படி சர்வதேச கிரிக்கெட்டில் ரன் மிஷின் ஆக இருக்கும் விராட் கோலிக்கு உலக அளவில் ரசிகர்களும் மிக அதிகம். அந்த வகையில் சமூக வலைதளத்தில் எப்பொழுதுமே ஆக்டிவாக இருக்கும் விராட் கோலிக்கு இன்ஸ்டாகிராமிலும் 20 மில்லியனுக்கு மேல் ரசிகர்கள் அவரை பின்தொடருகின்றனர்.

- Advertisement -

அதன் மூலம் மிகப்பெரிய ஒரு மதிப்பு மிக்க நபராக பார்க்கப்படும் விராட் கோலிக்கு ஒரு இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் எவ்வளவு வருமானம் கிடைக்கின்றது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை எடுக்கப்பட்ட முடிவுகளின்படி விராட் கோலி இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு பதிவினை வெளியிட்டால் ஆறு லட்சத்து 80 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வரை அதாவது இந்திய மதிப்பின்படி ரூபாய் 5 கோடி வரை ஒரு பதிவிற்கு பெறுகிறார்.

இதையும் படிங்க : IND vs WI : இஷான் கிஷனும் வேணாம். ருதுராஜ் கெய்க்வாடும் வேணாம். புதிய ஓப்பனரோடு களமிறங்கிய – இந்திய அணி

ஆனால் தற்போது ஆறு மாதங்களை கடந்த தற்போதைய நிலவரப்படி அவர் இந்திய மதிப்பில் சுமார் 8 கோடி வரை ஒரு பதிவிற்கு வருமானம் ஈட்டுகிறார் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement