IND vs WI : இஷான் கிஷனும் வேணாம். ருதுராஜ் கெய்க்வாடும் வேணாம். புதிய ஓப்பனரோடு களமிறங்கிய – இந்திய அணி

Shikhar-Dhawan
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியானது இன்று ட்ரினிடாட் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. அண்மையில் நடைபெற்று முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்திய அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி முற்றிலும் இளம் வீரர்களைக் கொண்டு இந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை அணுகியுள்ளது.

IND vs WI Shikhar Dhawan Nicholas Pooran

- Advertisement -

இந்நிலையில் இந்த ஒருநாள் தொடருக்கான துவக்க வீரர்களுக்கான இடத்தில் மூன்று வீரர்கள் போட்டியில் இருந்ததால் எந்த வீரருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவியிருந்தது. ஒருபுறம் கேப்டன் ஷிகர் தவான் துவக்க வீரருக்கான இடத்தை உறுதி செய்திருந்த வேளையில் இரண்டாவது துவக்க வீரர்க்கான இடத்தினை யார் பெறுவார்கள் என்று எதிர்பார்ப்பு அதிகமிருந்தது.

அதன்படி இந்த முதலாவது ஒருநாள் போட்டிக்கான துவக்க வீரராக ருதுராஜ் கெய்க்வாட் அல்லது இஷான் கிஷன் ஆகிய இருவரில் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Shubman Gill

ஆனால் யாருமே எதிர்பாராத விதமாக அவர்கள் இருவரையுமே தேர்வு செய்யாமல் இந்த முதல் ஒருநாள் போட்டிக்கான அணியில் டெஸ்ட் போட்டியின் துவக்க வீரரான சுப்மன் கில்லை இன்றைய போட்டியில் களமிறக்கியுள்ளது.

- Advertisement -

கடந்த 2019-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகியிருந்த அவர் 3 போட்டிகளில் மட்டும் விளையாடி இருந்த வேளையில் தற்போது இந்த போட்டியில் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார். அதுமட்டும் இன்றி இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க : IND vs WI : வெ.இ சாய்த்து பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி இந்த உலகசாதனையை இந்தியா படைக்குமா – முழுவிவரம்

இந்த போட்டியில் 53 பந்துகளை சந்தித்த வேளையில் 6 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களை விளாசி 64 ரன்கள் குவித்து ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதலாவது அரைசதத்தை பதிவு செய்து ஆட்டம் இழந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement