- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அது மட்டும் நடக்காம போய்ருந்தா 200 ஒன்டே, 80 டெஸ்டில் விளையாடிருப்பாரு.. தவான் கோச் ஆதங்கம்

சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் ஷிகர் தவான் சமீபத்தில் அறிவித்தார். டெல்லியைச் சேர்ந்த அவர் 2010ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி ஆரம்பக் காலங்களில் மிடில் ஆர்டரில் தடுமாறினார். இருப்பினும் 2013 சாம்பியன்ஸ் ட்ராபியில் அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனி அவரை துவக்க வீரராக களமிறக்கினார். அதை கச்சிதமாக பயன்படுத்திய தவான் தங்க பேட் விருது வென்று இந்தியா கோப்பையை வெல்ல உதவினார்.

அப்போதிலிருந்து சிறந்த துவக்க வீரராக விளையாடிய அவர் இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். குறிப்பாக ஐசிசி ஒருநாள் தொடர்களில் அதிக சராசரியை கொண்ட பேட்ஸ்மேனாக தவான் சாதனை படைத்தார். அதனால் மிஸ்டர் ஐசிசி என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட அவர் தற்போது 38 வயதில் வருங்கால வீரர்களுக்கு வழிவிட்டு விடை பெற்றுள்ளார்.

- Advertisement -

திறமையான தவான்:

இந்நிலையில் காயத்தை சந்திக்காமல் போயிருந்தால் ஷிகர் தவான் குறைந்தது 200 ஒருநாள் மற்றும் 80 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இன்னும் இந்தியாவுக்காக அசத்தியிருப்பார் என்று அவருடைய பயிற்சியாளர் மதன் சர்மா ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஷிகர் குறைந்தது 70 – 80 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று நான் எப்போதும் நம்பினேன்”

“ஏனெனில் அவர் தனது பேட்டிங்கில் நிறைய திறமைகளை கொண்டுள்ளார். வெள்ளைப்பந்து கிரிக்கெட்டிலும் அவர் 200க்கும் மேற்பட்ட ஒருநாள் போட்டிகளில் விளையாட விரும்பினேன். இருப்பினும் காயங்கள் அவருடைய கேரியரை பாழாக்கியது. குறிப்பாக 2019 உலகக்கோப்பையில் 2 போட்டியுடன் அவர் காயமடைந்து வெளியேறினார். அத்தொடரில் நல்ல ஃபார்மில் இருந்த அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக காயத்துடன் சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார்”

- Advertisement -

விளையாடிய காயங்கள்:

“இருப்பினும் தவறான நேரத்தில் காயத்தை சந்தித்ததால் நல்ல ஃபார்மில் இருந்தும் நிறைய போட்டிகளில் விளையாட முடியாமல் போனது. அதே போல இலங்கைக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் (2015) கால்லே போட்டியில் தவான் சதமடித்தது எனக்கு நினைவிருக்கிறது. ஆனால் அப்போது நல்ல ஃபார்மில் இருந்தும் காயத்தால் அவர் கடைசி 2 போட்டிகளை தவற விட்டார்”

இதையும் படிங்க: எப்போவும் ஃபார்ம் அவுட்டானதில்லை.. ஆஸியில் விராட் கோலியின் முடிவை பாத்து மிரண்டுட்டேன்.. கரண் சர்மா

“எனவே காயங்கள் நிச்சயமாக அவருடைய கேரியரில் விளையாடியது. இல்லையெனில் 2018 இங்கிலாந்து டெஸ்ட் தொடரை தவிர்த்து அனைத்து நாடுகளிலும் அவர் நன்றாகவே விளையாடினார். உண்மையில் அத்தொடரில் விராட் கோலியை தவிர்த்து வேறு எந்த இந்திய வேட்ஸ்மேன்களும் அசத்தவில்லை” என்று கூறினார். முன்னதாக ஷிகர் தவான் இந்தியாவுக்காக 34 டெஸ்ட், 167 ஒருநாள், 68 டி20 போட்டிகளில் விளையாடி 10000க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -