ஐ.பி.எல் தொடரில் கோலி,ரோஹித்,ரெய்னா ஆயோரின் ரெக்கார்டை காலி செய்த தவான் – விவரம் இதோ

Dhawan

ஐபிஎல் தொடரின் 30 ஆவது லீக் போட்டி நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையே நடந்தது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி வெற்றி புள்ளிப் பட்டியலில் மீண்டும் புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு வந்தது.

நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 161 ரன்களை குவித்தது. அதன்பிறகு விளையாடி ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் மட்டுமே அடித்தது. இந்த ஆட்டத்தில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என 57 ரன்களை டெல்லி அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் அடித்தார்.

இதன் மூலம் அவர் ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய சாதனை ஒன்றை தவான் படைத்துள்ளார். அந்த சாதனை யாதெனில் ஐபிஎல் தொடரில் இதுவரை அதிக அரைசதங்கள் அடித்த இந்திய வீரராக கோலி, ரோகித் சர்மா, ரெய்னா ஆகிய மூவரும் இருந்தனர். மூவரும் தலா 38 அரைதங்களை ஐபிஎல் தொடர்களில் அடித்து இருந்தனர்.

Dhawan

இந்நிலையில் நேற்றைய போட்டியில் தவான் நடித்த அரைசதம் ஐ.பி.எல் தொடரில் அவரது 39வது அரைசதமாக பதிவானது. இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் அதிக அரைசதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

- Advertisement -

warnerfier

இந்த பட்டியலில் அதிக அரை சதங்கள் அடித்த வீரராக ஆஸ்திரேலிய அணியின் வீரரான டேவிட் வார்னர் 46 அரைசதங்களுடன் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது