ஷிகார் தவான் கேப்டனாதது எல்லாருக்கும் தெரியும். ஆனா கேப்டனாக இந்த சாதனையில் – இவர்தான் ரொம்ப வயசானவராம்

- Advertisement -

இந்திய அணி தற்போது ஷிகார் தவான் தலைமையில் இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக மோதி வருகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக தவான் மற்றும் பாண்டியா ஆகியோருக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது.

IND

- Advertisement -

அவ்வேளையில் அனுபவ வீரர் என்ற காரணத்திற்காக ஷிகார் தவானுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் தனது அறிமுக கேப்டனாக விளையாடிய ஷிகர் தவான் முதல் போட்டியிலேயே வெற்றி பெற்று அசத்தினார்.

இந்நிலையில் அவர் முதல் முறையாக கேப்டனாக விளையாடியது நாம் அறிந்த ஒன்று தான். ஆனால் இப்படி அவர் கேப்டனாக மாறியதில் ஒரு விசித்திரமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார். இந்த விவரம் பலரும் அறிந்திராத ஒரு விடயம் என்றே கூறலாம். ஏற்கனவே ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு இருந்தாலும் சர்வதேச கிரிக்கெட்டில் அவர் இதுவரை கேப்டனாக செயல்பட்டது இல்லை.

dhawan

அந்த வகையில் தற்போது அவர் செய்த சாதனை யாதெனில் இந்திய அணிக்காக மிக வயதான வீரராக கேப்டன் பொறுப்பை ஏற்ற வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இலங்கை அணிக்கு எதிரான முதல் போட்டியின்போது கேப்டனாக அறிமுகமான ஷிகர் தவான் தனது 35 ஆவது வயது 225 வது நாளில் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.

இதன்மூலம் அதிக வயதில் இந்திய அணிக்காக முதல் போட்டியில் கேப்டன் பொறுப்பை ஏற்ற வீரர் என்ற சாதனையை தவான் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement