முதலில் இதற்கு கூச்சப்பட்ட சேவாக்.! அவரை சரிசெய்த வீரர் யார்..?

shewag shewag

இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின் மற்றும் ஷேவாக் இணை மிகவும் பிரபலம். இவர்கள் இருவரையும் இணைந்து பல போட்டிகளில் ரன்களை தெறிக்க விட்டிருக்கின்றனர். 2011 ஆம் நடையேற்ற உலக கோப்பையில் கூட இவர்களது இணை தொடர்ந்தது. இவர்களின் இருவருக்கும் உள்ள ஓரு அற்புதமான பந்தத்தை பற்றியதே இந்த தொகுப்பு.

sachin-shewag

 

சமீபத்தில் சச்சின் மற்றும் சேவாக் ஆகிய இருவரும் ‘வாட் தி டக்’ என்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர். அப்போது இவர்கள் இருவருக்கு இடையே நடந்த பல்வேறு ஸ்வாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். அதில் சச்சின், முதன் முதலில் சேவாக்கை சந்தித்த போது நடந்த ஒரு தருணத்தை கூறியுள்ளார்.

‘நான் முதன் முதலில் ஷேவாகை சந்தித்த போது அவர் என்னுடன் பேச மாட்டார் என்று தான் நினைத்தேன். ஆனால் பின்பு யோசித்தேன், நாங்கள் இருவரும் இணைந்து தான் ஆட வேண்டும். அதனால் இதனை இப்படியே விட்டு விட கூடாது என்று நினைத்தேன். அதனால், நான் ஷேவாகிடம் சென்று நாம் ஒன்றாக உணவருந்திவிட்டு வரலாம் என்று கூறினேன். நாங்கள் இருவரும் செல்வதற்கு முன்பாக நான் இவரிடம் , உங்களுக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டேன். அதற்கு இவர் ‘நான் வேஜி டேரியன்’ என்று கூறினார். அதற்கு நான் ஏன் என்று கேட்டதற்கு ‘ வீட்டில் சொல்லி இருக்கிறார்கள், சிக்கன் சாப்பிட்டால் கொழுப்பு கூடிவிடும் என்று சொல்லி இருக்கிறார்கள்’ என்று ஷேவாக் கூறியதாக சச்சின் கூறினார்.

sachinshewag

இதன் பின்னர் சச்சினை பற்றி பேசிய ஷேவாக் ‘நான் முதன் முதலில் இவரை சந்தித்த போது, இவர் எனக்கு கை கொடுத்து விட்டு கிளம்பிவிட்டார். அப்போது நான், இவரை  எந்த அளவிற்கு வழிபடுகிறேன். ஆனால், இவர் கையை மட்டும் கொடுத்து விட்டு கிளம்பிவிட்டாரே என்று எண்ணினேன். அதன் பின்னர் நானும் ஒரு மூத்த வீரராக ஆன பிறகு நான் சந்தித்த புதிய வீரர்களிடமும் அதேயே செய்தேன். பின்னர் தான் நான் உணர்ந்தேன் அறிமுகமில்லாத ஒருவரிடம் நீங்கள் திடீரென்று நெருக்கமாக முடியாது என்பதை உணர்ந்தேன்’ என்று ஷேவாக் தெரிவித்துள்ளார்.