மும்பை இந்தியன்ஸ் அணியின் கையுறையுடன் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடிய வீரர் – வைரலாகும் புகைப்படம்

Rutherford

இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் டி20 தொடர் நடைபெறுவதைப் போன்று பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. நடப்பு சீசனுக்கான லீக் சுற்று போட்டிகள் அனைத்தும் மார்ச் மாதத்தில் முடிவடைந்தது. அப்போது ஏற்பட்ட கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிளே ஆப் சுற்று போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டதாக நிர்வாகம் அறிவித்திருந்தது.

Pak-fans-1

இந்நிலையில் தற்போது உலகெங்கும் கொரோனாவின் தாக்கம் சற்று குறைய ஆரம்பித்துள்ளதால் மீண்டும் போட்டிகள் மெல்ல மெல்ல போட்டிகள் ஆரம்பித்துள்ளன. இதன் காரணமாக தற்போது மீண்டும் நிலுவையிலிருந்த பிளே ஆப் சுற்றுக்கு போட்டிகளை பாகிஸ்தான் சூப்பர் லீக் நிர்வாகம் நடத்த முன்வந்துள்ளது.

அதன்படி இந்த போட்டிகள் வரும் 17-ம் தேதி வரை நடத்த அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த பிளே ஆப் சுற்றில் கராச்சி கிங்ஸ், முல்தான் சுல்தான்ஸ், பெஷாவர் ஷால்மி, லாகூர் அணிகள் தகுதி பெற்றுள்ளன. அதில் கராச்சி அணிக்காக வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த 22 வயது பேட்ஸ்மேன் ரூதர்போர்ட் விளையாட உள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் இடம்பெற்றிருந்த இவர் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.

Rutherford 1

இருப்பினும் அவர் மும்பை அணியின் சார்பாக ஏலம் எடுக்கப்பட்டிருந்தார் என்பதால் மும்பை அணியுடன் இருந்தார். இந்நிலையில் தற்போது அவர் கராச்சி அணிக்காக பிளே ஆப் சுற்றுக்கு விளையாட பாகிஸ்தான் சென்றுள்ளார்.

- Advertisement -

அவர் பாகிஸ்தானுக்குச் செல்லும்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜாக்கெட்டை அணிந்து சென்றார். அந்த புகைப்படம் ஏற்கனவே வெளியாகி இணையத்தில் ஹிட் அடித்தது. இந்நிலையில் அதோடு மட்டுமல்லாமல் மும்பை இந்தியன்ஸ் அணியின் கையுறையை அணிந்து பேட்டிங் செய்தார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.