இந்த வருட ஐ.பி.எல் தொடரில் இந்த பந்து வீச்சாளர் பேட்ஸ்மேன்களை திணறவைப்பார் – ஷான் டெயிட் ஓபன் டாக்

MI

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி துவங்க இருந்த ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக பலமுறை தள்ளி வைக்கப்பட்டு தற்போது பல சிக்கல்களை கடந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி துவங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகம் பயணித்து விட்டன.

ipl

மேலும் தற்போது பயிற்சியையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்த ஐபிஎல் தொடரில் யார் வெற்றி பெறுவார்கள் ? எந்த அணி பேட்டிங்கில் பலம் வாய்ந்தது ? எந்த அணி பந்து வீச்சில் பலம் வாய்ந்த அணி ? சிறப்பாக விளையாட இருக்கும் பேட்ஸ்மேன் யார் ? சிறப்பாக விளையாட இருக்கும் பவுலர் யார் ? என்பது குறித்த பல்வேறு கருத்துக்களை பல முன்னாள் வீரர்களும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷான் டைட் இந்த வருட ஐபிஎல்லில் சிறப்பாக பந்து வீசும் வீரர் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த வருடம் ஐபிஎல் கோப்பையை மும்பை அணி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் இந்த தொடரை பொறுத்தவரை அவரே அதி வேகமாக பந்து வீசுவார் என்றும் தெரிவித்துள்ளார்.

Bumrah-1

மேலும் இந்த முழுத்தொடரிலும் பந்துவீச்சினை பொறுத்தவரை தன்மையானவராக இந்திய அணியின் வீரரான ஜஸ்பிரித் பும்ரா திகழ்வார் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் இது குறித்து பேசிய அவர் : பும்ராவிற்கு நல்ல வேகம் இருக்கிறது. மேலும் அவரது பந்துவீச்சை கண்டு உலகின் பல முன்னணி வீரர்களும் நடுங்குகின்றனர்.

- Advertisement -

Bumrah

அபாரமான பந்துவீச்சில் ஆதிக்கத்தை செலுத்தி வரும் அவர் மும்பை அணிக்காக சிறப்பாக செயல்படுவது மட்டுமின்றி இந்திய அணிக்காக மூன்று விதமான போட்டிகளிலும் கலக்கி வருகிறார். ஐ.பி.எல் தொடரில் 2013ஆம் ஆண்டிலிருந்து மும்பை அணிக்காக இவர் தொடர்ந்து விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.