- Advertisement -
இந்திய கிரிக்கெட்

என்ன நடந்தாலும் அவங்க 2 பேரையும் இந்திய அணி கழட்டிவிட வாய்ப்பு இல்ல – ஷான் பொல்லாக் கருத்து

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இந்த தொடரின் தற்போதைய நிலையில் இந்திய அணியானது இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதனை தொடர்ந்து எஞ்சியுள்ள இரண்டு ஆட்டங்கள் அடுத்தடுத்து நடைபெற இருக்கின்றன.

என்ன நடந்த அவங்க 2 பேரையும் நீக்க முடியாது : ஷான் பொல்லாக்

இந்த தொடரில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகித்தாலும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் துணை கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது பலரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. அதிலும் குறிப்பாக டி20 உலகக்கோப்பை தொடரானது நெருங்கி வரும் வேளையில் அவர்களது இந்த மோசமான செயல்பாடு விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.

- Advertisement -

ஏற்கனவே இந்த தொடரின் முதல் மூன்று ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் சூரியகுமார் யாதவ் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் இதுவரை ஒரு அரைசதம் கூட அடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். அதோடு இந்த ஆண்டு முழுவதுமே சர்வதேச டி20 போட்டிகளை பொருத்தவரை அவர்கள் இருவரும் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. ஆனால் அணியில் வாய்ப்புக்காக காத்திருக்கும் சஞ்சு சாம்சன் மூன்று சதங்களை அடித்து தனது வாய்ப்பிற்காக காத்திருக்கிறார்.

அதேபோன்று ரிங்கு சிங் ஒரு பிராப்பரான ஃபினிஷராக வெளியில் இருந்து வருகிறார். ஆனால் அவர்களுக்கெல்லாம் தொடர் வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்திய டி20 அணியில் என்ன நடந்தாலும் சூரியகுமார் யாதவ் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் வெளியேற்றப்பட மாட்டார்கள் என முன்னாள் தென்னாப்பிரிக்கா வீரரான ஷான் பொல்லாக் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :

- Advertisement -

என்னைப் பொருத்தவரை தற்போதைய நிலையில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் சுப்மன் கில் ஆகியோரை இந்திய அணி வெளியேற்ற நினைக்காது. ஏனெனில் அடுத்த இரண்டு மாதங்களில் டி20 உலக கோப்பை தொடரானது நடைபெறவுள்ள வேளையில் அந்த தொடரில் இவர்கள் இருவருமே முக்கிய பங்கு வைப்பார்கள் என்பதால் இந்த விடயத்தில் இந்திய அணி எந்த ஒரு முடிவையும் தற்போது எடுக்காது. ஆனாலும் இந்த நேரத்தில் சஞ்சு சாம்சனை நாம் முயற்சி செய்து பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க : அந்த வார்த்தையை சொல்லாமல் சுப்மன் கில்லுக்கு கடைசி 2 போட்டியில் ரெஸ்ட் குடுங்க – இர்பான் பதான் கருத்து

ஏனெனில் அவரும் மிகச் சிறப்பான ஃபார்மில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்திய அணி தற்போது சிறப்பாக விளையாடி வந்தாலும் குறிப்பிட்ட சில வீரர்கள் ஃபார்முக்கு வருவது முக்கியம். சுப்மன் கில், சூரியகுமார் யாதவ் போன்ற தரமான வீரர்கள் பார்முக்கு திரும்ப ஒரு சில போட்டிகளே போதும் என்று தான் கருதுவதாகவும் ஷான் பொல்லாக் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -