தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் தற்போது இந்திய அணியானது பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் வேளையில் எஞ்சியுள்ள கடைசி இரண்டு ஆட்டங்களில் இந்திய அணியானது விளையாட இருக்கிறது.
சுப்மன் கில்லுக்கு ஓய்வு குடுங்க : இர்பான் பதான் கருத்து
இந்த டி20 தொடரில் இந்திய அணி என்னதான் இரண்டு வெற்றிகளை பெற்று முன்னிலை வகித்தாலும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் துணை கேப்டன் சுப்மன் கில் ஆகியோரது மோசமான பேட்டிங் ஃபார்ம் மீது பல்வேறு விமர்சனங்கள் தொடர்ச்சியாக இருந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக சுப்மன் கில்லை நீக்கிவிட்டு சஞ்சு சாம்சனை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகிறது.
ஏனினில் இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் 4 ரன்கள் மட்டுமே அடித்த சுப்மன் கில், இரண்டாவது ஆட்டத்தில் டக் அவுட்டும், மூன்றாவது ஆட்டத்தில் 28 ரன்கள் மட்டுமே குவித்திருந்தார். மேலும் கடைசியாக அவர் விளையாடிய 10 இன்னிங்ஸ்களில் வெறும் 127 ஸ்ட்ரைக் ரேட்டுடன் குறைந்த அளவிலான ரன்களை மட்டுமே அவர் அடித்துள்ளார்.
இதன் காரணமாக அவரை நீக்கிவிட்டு சஞ்சு சாம்சனை விளையாட வைக்க வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் கூறுகையில் :
சுப்மன் கில்லை பொறுத்தவரை “டிராப்” என்ற சொல்லை பயன்படுத்தாதீர்கள். தற்போதைக்கு அவருக்கு ஓய்வு கொடுக்கிறோம் என்று கூறி அவரை அணியிலிருந்து வெளியேற்றி வேறு ஒரு வீரரை முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். அந்த புதிய வீரர் 2 போட்டிகளிலும் விளையாட வேண்டும்.
இதையும் படிங்க : மினி ஏலம் முடியும்போது கோடீஸ்வரர்களாக மாறப்போகும் 3 இளம் வீரர்கள் குறித்து பேசிய – ரவிச்சந்திரன் அஷ்வின்
கடந்த ஓராண்டாகவே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சஞ்சு சாம்சன் இரண்டு மூன்று மோசமான இன்னிங்ஸ்களுக்கு பிறகு டிராப் செய்யப்பட்டதாக உணர்ந்திருப்பார். அவருக்கு இந்த நேரத்தில் வாய்ப்பினை அளிக்க வேண்டும். இத்தனை ஆட்டங்களாக சுப்மன் கில்லை பார்த்து விட்டோம். எனவே சரியான நேரத்தில் சஞ்சு சாம்சனுக்கு வழங்க வேண்டும் என இர்ஃபான் பதான் கூறியது குறிப்பிடத்தக்கது.



