இவர் பந்துவீச வந்தால் ஒட்டு மொத்த தென்னாபிரிக்க அணிக்கே பயம் வந்துடும் – உணமையை ஒப்புக்கொண்ட தெ.ஆ முன்னாள் வீரர்

Pollock
- Advertisement -

கொரோனா பாதிப்பின் காரணமாக உலகம் முழுவதும் கிரிக்கெட் உட்பட பல்வேறு விளையாட்டு போட்டிகளும் தற்சமயம் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த பாதிப்பில் இருந்து உலக நாடுகள் மீண்டுவர இன்னும் சில மாதங்கள் பிடிக்கும் என்றும் நிபுணர்கள் தங்களது கருத்தினை தெரிவித்துள்ளனர். இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் இன்னும் சில மாதங்கள் காத்திருக்கத்தான் வேண்டும். மேலும் உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் வீரர்களும் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக வீட்டில் இருப்பதால் சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களின் கிரிக்கெட் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்து வருகின்றனர்.

Pollock 1

- Advertisement -

அந்த வகையில் தற்போது தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஷான் பொல்லாக் தான் விளையாடிக்கொண்டிருந்த சமயத்தில் தென்னாபிரிக்க அணியை மிரட்டிய பாகிஸ்தான் பந்துவீச்சாளர் குறித்து பகிர்ந்துள்ளார். அதன்படி பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் எங்களுக்கு பந்து வீசும்போது மிரட்டலாக இருக்கும்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி நடையேறும் போதெல்லாம் அவரது ஓவர் எப்போது முடியும் என்று காத்திருந்தோம் என தென்னாபிரிக்க முன்னாள் ஜாம்பவான் ஷான் பொல்லாக் தெரிவித்துள்ளார். அனைத்து காலகட்டத்திலும் வேகப் பந்துவீச்சாளர்கள் பட்டியலை எடுத்துப் பார்த்தால் அதில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் கண்டிப்பாக இருப்பார்.

Akhtar

எப்போதும் வேகப்பந்து வீச்சாளர்களை தரமாக உருவாக்கும் தன்மை கொண்டது பாகிஸ்தான். அப்படி 1997 ஆம் ஆண்டில் இருந்து 2011 ஆம் ஆண்டு வரை 14 ஆண்டுகள் பாகிஸ்தான் கிரிக்கெட் ஆடியவர்தான் சோயப் அக்தர். பாகிஸ்தான் அணிக்காக 46 டெஸ்ட் போட்டிகளிலும் 163 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார்.

- Advertisement -

அவர் ஆடிய காலத்தில் எதிரணி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் வகையில் பந்துவீசிய 160 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் அவ்வப்போது பந்து வீசுவார். அவரின் ஆஜானுபாகுவான தோற்றம் பவுண்டரி லைனில் இருந்து ஓடிவந்து அசுர வேகத்தில் பந்து வீசுவது ஆகியவற்றை பார்த்தாலே பேட்ஸ்மேன்களுக்கு சற்று பயம்தான். எப்போது அக்தரின் ஓவர் முடிவதற்குள் நாங்களெல்லாம் காத்திருந்தோம் என ஷான் பொல்லாக் கூறியதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

Akhtar 1

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பொல்லாக் : எங்கள் காலத்தில் நாங்கள் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆடும் போது அக்தர் ஓவர்கள் எப்போது முடியும் என காத்திருப்போம். இன்னும் எத்தனை ஓவர்கள் அவர் வீசுவார் என்பதை தெரிந்துகொள்ள பாகிஸ்தான் கேப்டனை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்போம். அவர்கள் ஓவர் முடிந்து விட்டால் தான் நாங்கள் எல்லாம் நிம்மதியான மனநிலைக்கு வர முடியும் என்று கூறியுள்ளார் ஷான் பொல்லாக்.

Advertisement