கோலியை விட இவரது கேட்டன்சியில் இந்திய அணி இன்னும் சுதந்திரமாக விளையாடும் – ஆஸி முன்னாள் வீரர் பேட்டி

Ind-lose
- Advertisement -

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து தொடர்களிலும் விளையாடியது. டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் வென்று மிகப்பெரிய சாதனையை படைத்து இந்தியாவிற்கு திரும்பியது. டெஸ்ட் தொடரின்போது முதல் போட்டி முடிவடைந்தவுடன் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இந்தியாவிற்கு திரும்பி விட்டார். இரண்டாவது போட்டியில் இருந்து துணைக் கேப்டனாக இருந்த அஜின்கியா ரஹானே தான் அணியை வழி நடத்தினார்.

IND-1

- Advertisement -

அடுத்தடுத்த மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து இரண்டு டெஸ்ட் போட்டிகளை வென்று ஒரு போட்டியில் சமன் செய்து பட்டையைக் கிளப்பியது. இதனை தொடர்ந்து தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு விராட் கோலி தான் கேப்டனாக செயல்பட போகிறார். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் லீ ரஹானேவின் கேப்டன்ஷிப் குறித்து பேசியிருக்கிறார் அவர் கூறுகையில்…

ரஹானேவின் தலைமையிலான இந்திய அணி அமைதியான அணியாக தான் இருக்கிறது. நான் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக இருந்தால் ரஹானே கேப்டனாக நியமித்து இருப்பேன். விராட் கோலிக்கு எந்தவித குறையும் இல்லாமல் பேட்டிங்கில் அவரை பட்டையைக் கிளப்ப அனுப்பிவிடுவேன். அப்படி இருந்தால் இந்திய அணி இன்னும் மிகச் சிறப்பானதாக இருக்கும்.

Rahane

இந்த தொடரில் மட்டும் இந்திய அணி 21 வீரர்களை பயன்படுத்தியிருக்கிறது. அப்படி பயன்படுத்தப்பட்ட ஒவ்வொரு வீரர்களும் மிகச் சிறப்பாக விளையாடி இருக்கிறார்கள். தங்களுக்கு கொடுத்த பணியை செவ்வனே நிறைவேற்றி இருக்கின்றனர் என்று தெரிவித்திருக்கிறார் அவர். ரகானே மொத்தம் இந்திய அணிக்காக ஐந்து போட்டிகளில் கேப்டனாக இருந்திருக்கிறார்.

Rahane

இதில் 4 போட்டிகளில் வெற்றி பெற்று ஒரே ஒரு போட்டியில் சமன் செய்து தோல்வியே காணாத கேப்டனாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் விராட் கோலியே எங்களது கேப்டன் என்று சமீபத்தில் ரஹானே பேட்டி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement