ரசிகர்களுக்காக இம்பேக்ட் பிளேயர் ரூல் இருக்கட்டும்.. பவுலர்களுக்காக இதை மட்டும் மாத்துங்க.. தாக்கூர் கோரிக்கை

Shardhul Thakur
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கோலாகலமாக துவங்கி பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. முன்னதாக ஐபிஎல் என்றாலே பெரும்பாலான போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் பவுலர்களை அடித்து நொறுக்கி பவுண்டரி, சிக்சர்களை அடித்து ரசிகர்களை மகிழ்வித்து தங்களது அணிகளுக்கு வெற்றிகளைப் பெற்றுக் கொடுப்பது வழக்கமாகும். அந்த சூழ்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இம்பேக்ட் பிளேயர் விதிமுறையை பிசிசிஐ அறிமுகப்படுத்தியது.

அதனால் ஒவ்வொரு அணியும் ஒரு எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேன் மற்றும் பவுலருடன் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளன. அதன் காரணமாக இப்போதெல்லாம் ஐபிஎல் தொடரில் 250 ரன்கள் எளிதாக அடிக்கப்படுகிறது. இந்நிலையில் இம்பேக்ட் விதிமுறை தம்மைப் போன்ற பவுலர்களுக்கு பெரிய பாதகத்தை ஏற்படுத்துவதாக லக்னோவுக்காக விளையாடும் இந்திய வீரர் சர்துள் தாக்கூர் கூறியுள்ளார்.

- Advertisement -

தாக்கூர் கோரிக்கை:

ரசிகர்களை மகிழ்விப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட அந்த விதிமுறையை விட ஃபிளாட்டான பிட்ச்கள் தான் பவுலர்களின் நிலைமையை கடினமாக்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார். எனவே இம்பேக்ட் வீரர் விதிமுறை தொடரலாம் ஆனால் பிட்ச்கள் பேட்டிங், பௌலிங் ஆகிய இரண்டுக்கும் சமமாக இருக்கும் வகையில் மாற்றப்பட வேண்டும் என்று தாக்கூர் பிசிசிஐயை கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“இதை நான் விரும்பவில்லை. பௌலர்கள் விரும்பக்கூடிய விஷயமாகும். இது பற்றி நிறைய பவுலர்கள் பேசியிருக்க மாட்டார்கள் அல்லது பிட்ச் சூழ்நிலைகள் பற்றி பேசுவதற்கு அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்காது. பேட்ஸ்மேன்கள் வந்து எங்களை அடித்து நொறுக்கும் அளவுக்கு போட்டி ஒருதலைப் பட்சமாக இல்லாத பிட்ச் உருவாக்கப்பட வேண்டும் என்று அனைத்து பவுலர்களும் கேட்கிறார்கள்”

- Advertisement -

சமமான வாய்ப்பு:

“ஏனெனில் போட்டியில் அனைவருக்கும் நியாயமான வாய்ப்பு கிடைக்க வேண்டும். இது போக இம்பேக்ட் விதிமுறை வந்துள்ளதை நாம் பார்க்கிறோம். அதன் காரணமாக அணிகள் சேசிங் செய்யும் போது எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேனை வைத்து விளையாடுகின்றன அல்லது முதலில் பேட்டிங் செய்யும் போதும் எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேனை களமிறக்குகின்றன”

இதையும் படிங்க: ஆஸி மாதிரியே இங்கிலாந்தில் இதை செஞ்சா.. பும்ராவின் வாழ்க்கை முடிஞ்சுரும்.. கம்பீரை எச்சரித்த ஷேன் பாண்ட்

“அதே போல பவுலர்களையும் பயன்படுத்துகிறார்கள். இம்பேக்ட் வீரர் விதிமுறை பொழுதுபோக்கு சம்பந்தப்பட்ட விஷயமாகும். ஆனால் அதன் காரணமாக மட்டும் அணிகள் 250 ரன்களை அடிக்கவில்லை. ஒரு தலைப்பட்சமாக பிட்ச் அமைக்கப்படுவதாலேயே அடிக்கப்படுகின்றன. எனவே பேட்ஸ்மேனை அவுட்டாக்க பவுலிங் துறையில் இருக்கும் எங்களுக்கு நியாயமான சமமான வாய்ப்பைக் கொடுங்கள்” என்று கூறினார்.

Advertisement