CSK vs MI : கடைசி பந்தை எதிர்கொண்டபோது என் மனதில் இதுவே தோன்றியது. ஆனால் அதனை செய்ய தவறிவிட்டேன் – ஷர்துல் தாகூர் விளக்கம்

மும்பை அணிக்கு எதிராக ஹைதராபாத்தில் நடந்த ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி நூலிழையில் தவறிவிட்டது இதனால் ஐ.பி.எல் தொடரை இழந்தது

மும்பை அணிக்கு எதிராக ஹைதராபாத்தில் நடந்த ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி நூலிழையில் தவறிவிட்டது இதனால் ஐ.பி.எல் தொடரை இழந்தது சென்னை அணி. மும்பை அணி 4 ஆவது முறையாக கைப்பற்றி வரலாறு படைத்தது.

Malinga

இந்த போட்டியில் அபாரமாக ஆடிய வாட்சன் 80 ரன்கள் அடித்து இறுதிவரை தனியாக போராடினார். அப்போது சென்னை அணியின் வெற்றிக்கு 2 பந்து 4 ரன்கள் தேவை அப்போது வாட்சன் ரன் ஆகி வெளியேறியதால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. இறுதி இரண்டு பந்துகளுக்கு 4 ரன்கள் தேவை என்ற நிலையில் தோனி ஹர்பஜன் சிங் இருக்கையில் தாகூரை களமிறக்கினார் தோனி.

இந்நிலையில் கடைசி பந்தில் அவுட் ஆன ஷர்துல் தாகூர் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : பேட்டிங் செய்ய நான் மைதானத்துக்குள் சென்ற போது என் மனதில் ஒன்று மட்டுமே தோன்றியது மலிங்கா வீசிய பந்தை எப்படியாவது அடித்து விட்டு ஓட வேண்டும் என்பதே என் எண்ணம். முதல் பந்தில் 2 ரன்கள் அடித்து அடுத்த பந்தை பவுண்டரிக்கு அடிக்கலாம் என்று நினைத்திருந்தேன்.

Shardul Thakur

ஆனால் மலிங்கா என் கால்களை நோக்கி பந்துவீசினார். காலை நகர்த்தி ஒரு பெரிய ஷாட் அடிக்க நினைத்தேன். ஆனால் எதிர்பாராத விதமாக வந்து என் காலில் பட்டது அதனால் வின்னிங் ஷாட் அடிக்க வேண்டிய நான் அவுட்டானேன். இதனால் எனக்கு வருத்தமும் ஏற்பட்டது ஆனால் கிரிக்கெட் இதோடு முடிந்து விடாது மீண்டும் ஒருமுறை என்னை நிரூபிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருக்கிறேன் அதனை சரியாக பயன்படுத்துவேன் என்று ஷர்துல் தாகூர் கூறினார்.