வராதீங்கன்னு கவர்னர் சொல்லிட்டாரு.. டிம் ஃபைன் பொய் சொன்னாரு.. அவங்க சண்டை போட்டாங்க.. சர்துள் தாகூர் பேட்டி

Shardul Thakur 2
- Advertisement -

வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா அங்கு வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. காலம் காலமாக ஆஸ்திரேலியாவில் தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த இந்தியா கடந்த 2018/19இல் விராட் கோலி தலைமையில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணியாக வரலாறு படைத்தது.

அதே போல 2020/21 தொடரில் முதல் போட்டியிலேயே 36க்கு ஆல் அவுட்டான இந்தியா வரலாற்று தோல்வியை சந்தித்தது. ஆனால் அங்கிருந்து ரஹானே தலைமையில் கம்பேக் கொடுத்த இந்தியா முக்கிய வீரர்கள் இல்லாமலேயே 2 – 1 (4) கணக்கில் மீண்டும் ஆஸ்திரேலியாவில் தொடரை வென்று சரித்திரம் படைத்தது. குறிப்பாக நடராஜன், வாஷிங்டன் சுந்தர் போன்ற இளம் வீரர்களை வைத்து காபா கோட்டையை இந்தியா தகர்த்தது.

- Advertisement -

வராதீங்க சொன்னாங்க:
முன்னதாக 2020/21 பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரின் போது லாக்டவுன் விதிமுறைகள் இருந்தது. அந்த சமயத்தில் பிரிஸ்பேன் நகரில் ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட் உள்ளிட்ட வீரர்கள் வெளியே சென்று ஹோட்டலில் சாப்பிட்டனர். அப்போது ஒரு இந்திய ரசிகர் அவர்கள் சாப்பிட்டதற்கான பணத்தை தம்முடைய அன்பு பரிசாக செலுத்தி அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

அதனால் இந்திய வீரர்கள் லாக்டவுன் விதிமுறையை மீறி வெளிநபர்களுடன் தொடர்பு கொண்டதாக ஆஸ்திரேலிய கேப்டன் டிம் ஃபைன் விமர்சித்தார். அதே போல ஆஸ்திரேலிய ஊடகங்களும் இந்திய வீரர்களை கடுமையாக விமர்சித்தன. இந்நிலையில் அந்த தருணத்தில் நடந்த பின்னணியை அத்தொடரில் விளையாடிய சர்துள் தாக்கூர் பகிர்ந்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஆஸ்திரேலியா எங்களை மோசமாக நடத்தியது. 4 – 5 நாட்களாக எங்கள் ஹோட்டல் அறைகளுக்கு பணியாட்களை அனுப்பவில்லை. எங்களுக்கு தேவையான விஷயங்களை நாங்களே செய்து கொள்ள வேண்டியிருந்தது. பிரிஸ்பேன் நகரிலிருந்து சிட்னிக்கு சென்ற போது “இந்தியர்கள் இங்கே விதிமுறைகளைப் பின்பற்றி நடக்கவில்லை என்றால் வரவேண்டாம். அவர்கள் இங்கே வராமல் இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்” என்று குயின்ஸ்லாந்து மாகாணத்தின் கவர்னர் சொன்னார்”

இதையும் படிங்க: இந்திய அணி இதை விட கஷ்டமான சவாலை பாத்திருக்கு.. 3வது போட்டியில் அதை செய்ய தெரியும்.. சுந்தர் பேட்டி

“அப்படி எங்கள் மீது அழுத்தத்தை போடுவதற்காக அப்போது நிறைய எதிர்மறையான விஷயங்கள் சொல்லப்பட்டன. டிம் ஃபைன் பேசிய பேட்டிகளையும் நான் கேட்டேன். உண்மையில் “இந்தியா மீது நாங்கள் அழுத்தத்தை போடவில்லை. அவர்கள் விரும்பும் அனைத்தையும் செய்து கொடுத்தோம்” என்ற பொய்யை பேசிய அவர் ஊடகங்களில் தன்னைத் தானே சேமித்துக் கொண்டார். ஆனால் உண்மை எனக்குத் தெரியும். எங்கள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் ரஹானே ஆகியோர் எங்களுக்கு தேவையான வசதிகளை பெறுவதற்காக தொடர்ந்து ஆஸ்திரேலிய வாரியத்துடன் சண்டையிட்டார்கள்” என்று கூறினார்.

Advertisement