ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அடுத்தடுத்த டெஸ்ட் தொடர்களில் பங்கேற்க இருக்கும் வேளையில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணியானது ரஞ்சி கோப்பையை வென்ற மும்பை அணிக்கு எதிராக இராணி கோப்பையில் விளையாடி வருகிறது. இந்த ரெஸ்ட் ஆப் இந்தியா அணியில் இந்திய அணியில் அடுத்து வாய்ப்புக்காக காத்திருக்கும் வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். அதே வேளையில் ரஞ்சி கோப்பையை வென்ற மும்பை அணியில் பல மும்பை நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்து விளையாடி வருகின்றனர்.
ஷர்துல் தாகூரின் போராட்ட குணம் :
அந்த வகையில் அக்டோபர் ஒன்றாம் தேதி துவங்கிய இந்த போட்டியில் மும்பை அணி தற்போது முதல் இரண்டு நாட்களில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக மும்பை அணியின் நட்சத்திர வீரர் சர்பராஸ்கான் இரட்டை சதம் அடித்து அந்த அணி தற்போது 500 ரன்கள் கடந்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இந்த ராணி கோப்பை போட்டியில் மும்பை அணிக்காக விளையாடி வரும் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஷர்துல் தாகூர் செய்த ஒரு சம்பவம் தற்போது அனைவரது மத்தியில் பாராட்டினை பெற்றுள்ளது.
அந்த வகையில் மும்பை அணிக்காக விளையாடி வரும் அவர் கடந்த சில நாட்களாகவே காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் ஒன்பதாவது விக்கெட்டிற்கு சர்பராஸ் கானுடன் இணைந்து பேட்டிங் செய்து 73 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்த பின்னர் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த வேளையில் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அதன் பிறகு வெளியான தகவலின் படி தெரிவிக்கப்பட்டதாவது : அக்டோபர் 1-ஆம் தேதி நீண்ட இடைவெளிக்கு பின்னர் இராணி கோப்பையில் தாகூர் பங்கேற்றம்போதே அவர் கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு உள்ளார். ஆனாலும் முதல் நாளில் மருத்துவர் உதவியை பெற்ற அவர் முதல் நாள் விளையாடி இருந்தார். அதன் பின்னர் இரண்டாவது நாள் அவரால் இயல்பாக வேலைகளை செய்ய முடியவில்லை.
இதையும் படிங்க : ரொம்ப நல்லா மீண்டு வந்திருக்காரு.. முகமது ஷமி ரிட்டர்ன் எப்போ தெரியுமா? – வெளியான ஹேப்பி நியூஸ்
இருப்பினும் இறுதி நேரத்தில் பேட்டிங் செய்ய களமிறங்கி தன்னுடைய பங்களிப்பை வழங்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தற்போது மருத்துவரின் ஆலோசனைப்படி மருத்துவமனையில் ஓய்வில் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளனர். இப்படி கடும் காய்ச்சல் இருந்தும் மும்பை அணிக்காக அவர் அர்ப்பணிப்புடன் விளையாடியிருந்தது ரசிகர்கள் மத்தியில் பாராட்டினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



