ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்தது. கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவில் துவங்கி வெஸ்ட் இண்டீஸில் முடிந்த அத்தொடரில் ஆரம்பம் முதலே அசத்திய இந்தியா தோல்வியை சந்திக்காமல் கோப்பையை வென்றது. குறிப்பாக இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்தியா 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பையை வென்றது.
அந்த வெற்றியால் எம்எஸ் தோனிக்கு பின் டி20 உலகக் கோப்பையை வென்ற 2வது இந்திய கேப்டன் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்தார். ஐபிஎல் தொடரில் தோனிக்கு முன்பாகவே 5 கோப்பைகளை வென்ற அவர் வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார். அதனால் இந்தியாவின் கேப்டனாகவும் பொறுப்பேற்ற அவருடைய தலைமையில் 2022 டி20 உலகக் கோப்பை, 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மற்றும் உலகக் கோப்பைகளில் இந்தியா தோல்வியை சந்தித்தது.
சிறந்த கேப்டன்:
இருப்பினும் இம்முறை தொடர் தோல்விகளை உடைத்து கோப்பையை வென்ற அவர் எம்.எஸ். தோனிக்கு நிகராக சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் எம்எஸ் தோனி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரில் சிறந்த கேப்டன் யார் என்ற சர்துள் தாக்கூரிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு எம்.எஸ். தோனி தான் சிறந்த கேப்டன் என்று தாக்கூர் கூறினார்.
இது பற்றி சமீபத்திய தனியார் நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “முதலில் ரோஹித் சர்மா என்னுடைய சிறந்த நண்பர். எனவே நான் எம்எஸ் தோனியை தேர்ந்தெடுப்பேன். ஒருவேளை நான் இப்படி சொன்னதற்காக தவறாக புரிந்து கொண்டு கோபமடைந்தாலும் அவரிடம் சென்று “ரோஹித், பிரச்சனையில்லை” என்று நட்பாக சொல்லி சமாளித்து விடுவேன்”
“நான் பேசும் இந்த வீடியோ வைரலாகி ரோஹித் சர்மாவிடம் செல்லும் போது அவர் தொலைபேசியில் என்னுடன் கோபமான நட்புடன் பேசலாம்” என்று கூறினார். முன்னதாக ரோஹித் சர்மா தலைமையில் ரஞ்சிக் கோப்பை மற்றும் இந்தியாவுக்காக விளையாடிய சர்துள் தாகூர் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் தோனி தலைமையில் விளையாடியுள்ளார். அந்த அனுபவத்தை வைத்து ரோஹித்தை விட தோனி சிறந்த கேப்டன் என்ற தாக்கூர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: உ.கோ ஜெயிச்சு கொடுத்த பும்ராவே அமைதியா இருக்காரு.. உங்களுக்கு ஹீரோயிசம் தேவையா? ஸ்ரீகாந்த் விமர்சனம்
அவர் கூறுவது போல 2007 டி20 உலகக் கோப்பை மட்டுமின்றி 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபியையும் தோனி கேப்டனாக வென்றுள்ளார். அதனால் 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாகவும் அவர் உலக சாதனை படைத்துள்ளார். அதை வருங்காலத்தில் ரோஹித் சர்மா சமன் செய்வாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.