உ.கோ ஜெயிச்சு கொடுத்த பும்ராவே அமைதியா இருக்காரு.. உங்களுக்கு ஹீரோயிசம் தேவையா? ஸ்ரீகாந்த் விமர்சனம்

Srikkanth 3
- Advertisement -

இலங்கைக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 27 வருடங்கள் கழித்து இந்தியா தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. குறிப்பாக கொழும்பு மைதானத்தில் சுழலுக்கு சாதகமாக இருந்த ஆடுகளத்தில் இலங்கை ஸ்பின்னர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் நன்றாக எதிர்கொள்ளவில்லை. அதனால் 2014க்குப்பின் இலங்கைக்கு எதிராக அடுத்தடுத்த 2 ஒருநாள் போட்டிகளில் இந்தியா தோல்வியை சந்தித்தது.

முன்னதாக அந்தத் தொடரில் பேட்டிங் துறையில் கேப்டன் ரோகித் சர்மா தவிர்த்து விராட் கோலி உள்ளிட்ட பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் சுமாராக விளையாடியது இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. அதே போல இந்திய ஸ்பின்னர்களும் இலங்கை வீரர்களுக்கு நிகராக அசத்தவில்லை. அத்துடன் பும்ரா இல்லாத சூழ்நிலையில் பொறுப்புடன் செயல்பட வேண்டிய சீனியர் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

- Advertisement -

சரக்கு இல்லாமல்:
இத்தனைக்கும் 2023 ஆசியக் கோப்பை ஃபைனலில் அவர் இலங்கையை 50 ரன்களுக்கு சுருட்டிய அதே கொழும்பு மைதானத்தில் தான் இத்தொடரும் நடைபெற்றது. ஆனால் இம்முறை புதிய பந்தை தவிர்த்து மற்ற நேரங்களில் இலங்கை பேட்ஸ்மேன்களிடம் அடி வாங்கிய சிராஜ் கடைசி போட்டியில் 74 ரன்கள் வாரி வழங்கி களத்திலேயே படுத்தார். இந்நிலையில் டி20 உலகக் கோப்பை வென்று கொடுத்த பும்ராவே விக்கெட்டுகள் எடுத்தால் அமைதியாக செல்வதாக ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

ஆனால் சிராஜ் ஓரிரு விக்கெட்டுகளை எடுத்து விட்டு அதிக ஆட்டம் போடுவதாக ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “சிராஜ் போடுவதே ஒன்றையணா வேகம். அதை போட்டுவிட்டு ஆஹா ஓஹோ என்ற வகையில் அவர் ஹீரோ போல குதிக்கிறார். இலங்கை பேட்ஸ்மேன்கள் இம்முறை சிராஜை அடித்து நொறுக்கி விட்டனர்”

- Advertisement -

“சிராஜ் ஓவராக குதிக்கிறார். அவரை விவிஎஸ் அதாவது வாரி வழங்கும் வள்ளல் சிராஜ் என்றே சொல்வேன். இப்படி பந்து வீசிவிட்டு அவர் காட்டும் அணுகுமுறை எனக்குப் பிடிக்கவில்லை. இப்போது தான் தொடர்நாயகன் விருது வென்ற ஜஸ்ப்ரித் பும்ரா 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியாவுக்கு வென்று கொடுத்தார். ஆனால் அவரே விக்கெட் எடுக்கும் போது ஏதாவது எக்ஸ்ப்ரசன் காண்பிக்கிறாரா என்று பாருங்கள்”

இதையும் படிங்க: நீரஜ் சோப்ரா அம்மாவின் வார்த்தைகளால் சோயப் அக்தர் நெகிழ்ச்சி.. அர்ஷத் அம்மாவின் வார்த்தையால் இந்தியர்கள் நெகிழ்ச்சி

“அவரைப் பார்த்து சிராஜ் கற்றுக்கொள்ள வேண்டாமா? கிரிக்கெட்டில் ஆக்ரோசம் வேறு ஆக்டிங் ஆக்ரோஷம் வேறு. சிராத் செய்வது ஆக்டிங் ஆக்ரோஷம். உண்மையில் அவருடைய கையில் சரக்கு இல்லை. 2023 ஆசிய கோப்பை ஃபைனலில் அசத்திய அவர் அவ்வளவு தான். அதன் பின் சிராஜ் பெரியளவில் அசத்தவில்லை. புதிய பந்தில் யார் வேண்டுமானாலும் விக்கெட்டுகளை எடுப்பார்கள்” என்று கூறினார்.

Advertisement