ரோஹித் சர்மா மற்றும் தோனி இருவரில் சிறந்த கேப்டன் யார்? ஷர்துல் தாகூர் அளித்த பதில் – நல்லா சமாளிக்குறாரு

Shardul
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி ஐசிசி தொடர்களின் மூன்று வகையான கோப்பைகளையும் பெற்று தந்த ஒரே இந்திய கேப்டனாக சாதனை நிகழ்த்தியுள்ளார். கடந்த 2007-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையையும், கடந்த 2011-ஆம் ஆண்டு 50 ஓவர் உலககோப்பையையும், 2013-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் வென்று மூன்று வகையான ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்த மாபெரும் கேப்டனாக இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறார்.

அதே வேளையில் விராட் கோலிக்கு அடுத்து இந்திய அணி கேப்டன் பொறுப்பை ஏற்ற ரோஹித் சர்மா கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியை மிகச்சிறப்பாக வழிநடத்தி வருகிறார். அவரது தலைமையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி, 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி வரை சென்றது.

- Advertisement -

அதேபோன்று அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரை வெற்றிகரமாக கைப்பற்றி 17 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது முறையாக டி20 சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியிருந்தது. இதனால் ரோகித் சர்மாவின் மீதும் ரசிகர்கள் மிகப்பெரிய அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ரோகித் சர்மா மிகச் சிறப்பாக இந்திய அணியை வழிநடத்தி வந்தாலும் தோனியின் தலைமையிலேயே வீரர்கள் நம்பிக்கை பெற்றதால் பலரும் தோனியையே சிறந்த கேப்டன் என்று தெரிவித்து வருகின்றனர். அதேபோன்று தற்போதைய சூழலில் தோனி, ரோஹித் ஆகியோரது கேப்டன்சி குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அதற்கு முன்னாள் வீரர்களும், இந்நாள் வீரர்களும் தங்களது கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்திய வீரரும், சிஎஸ்கே அணியின் வீரருமான ஷர்துல் தாகூரிடம் ரோகித் சர்மா அல்லது தோனி இருவரில் யார் சிறந்த கேப்டன்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு பதில் அளித்த தாகூர் கூறுகையில் : ரோகித் சர்மா எனது நண்பர். அதனால் நான் தோனியைத் தான் சிறந்த கேப்டன் என்று தேர்வு செய்வேன். ரோகித் இதை புரிந்து கொள்வார். அவர் என் மீது கோபப்பட்டாலும் நான் அவரை தொலைபேசியில் அழைத்து சமாளித்து விடுவேன்.

இதையும் படிங்க : அப்படின்னா நான் ஆல் ஃபார்மட் பிளேயர் இல்லயா? சுப்மன் கில்லுக்கு போட்டியாக சூரியகுமார் வெளியிட்ட அறிவிப்பு

இந்த வீடியோ அவரது பார்வைக்கு சென்றாலும் எனக்கு கவலை இல்லை. அவர் எப்போதும் போல தான் இருப்பார். அவரிடம் நான் பேசி சமாளித்து விடுவேன் என வேடிக்கையாக கூறியுள்ளார். அவரது கருத்து இப்படி இருந்தாலும் உண்மையிலேயே அவருக்கு தோனியின் கேப்டன்சி தான் பிடிக்கும் என்பதை அவரே பலமுறை வெளிப்படையாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement