- Advertisement -
ஐ.பி.எல்

ஏசில உட்கார்ந்துகிட்டு என்னை கிண்டல் செய்ற அவங்க.. முதல்ல சொந்த ரெக்கார்ட்டை பாக்கனும்.. தாக்கூர் பதிலடி

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெற்ற 26வது போட்டியில் குஜராத் அணியை லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் சாய் சுதர்சன் 56, கேப்டன் சுப்மன் கில் 60 ரன்கள் எடுத்ததால் ஒரு கட்டத்தில் குஜராத் 120/1 என்ற நல்ல துவக்கத்தைப் பெற்றது. அதனால் 200 ரன்கள் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட குஜராத்தை அபாரமாக பௌலிங் செய்த லக்னோ 180/6 ரன்களுக்கு மடக்கியது.

அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய அந்த அணிக்கு அதிகபட்சமாக சர்துள் தாக்கூர், ரவி பிஸ்னோய் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தார்கள். அடுத்து விளையாடிய லக்னோவை ஐடன் மார்க்ரம் 58, நிக்கோலஸ் பூரான் 61 ரன்கள் அடித்து கடைசி ஓவரில் வெற்றி பெற உதவினர். முன்னதாக இந்திய வீரர் சர்துள் தாக்கூர் முக்கிய நேரத்தில் விக்கெட்டுகளை எடுத்து திருப்புமுனையை உண்டாக்கக்கூடிய பவுலராக வலம் வருகிறார்.

- Advertisement -

கிண்டல்கள், விமர்சனங்கள்:

அதே சமயம் அதற்கு நிகராக நிறைய ரன்களை வழங்கும் பவுலராக அறியப்படும் அவரை நடப்பு ஐபிஎல் தொடரில் எந்த அணியும் வாங்கவில்லை. இருப்பினும் காயமடைந்த வீரருக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற அவர் இதுவரை 5 போட்டிகளில் 11 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார். இருப்பினும் அவருடைய எக்கனாமி ரேட் பற்றி விமர்சனங்களும் கிண்டல்களும் இருக்கின்றன.

அது பற்றி அந்தப் போட்டியின் முடிவில் கேட்கப்பட்ட போது குளிர்சாதனப் படப்பிடிப்பு அறையில் உட்கார்ந்து கொண்டு விமர்சிக்கும் முன்னாள் வீரர்கள் முதலில் தங்களுடைய ரெக்கார்ட் பார்க்க வேண்டும் என்று தாக்கூர் பதிலடி கொடுத்தார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஒரு பவுலிங் துறையாக நாங்கள் தொடர் முழுவதுமே நன்றாக செயல்பட்டு வருவதாக நம்புகிறேன்”

- Advertisement -

தாக்கூர் பதிலடி:

“இருப்பினும் நிறைய நேரங்களில் வர்ணனையில் எங்களைப் பற்றி விமர்சனங்கள் இருக்கின்றன. அவர்கள் பவுலர்கள் மீது கடினமாக பேசுகிறார்கள். ஆனால் இப்போதெல்லாம் டி20 கிரிக்கெட்டில் 200 ரன்கள் அடிக்கப்படுவது சாதாரணமாகி விட்டது. இருப்பினும் வர்ணனையாளர்கள் எப்போதும் விமர்சனத்தை முன் வைக்கிறார்கள். ஸ்டூடியோவில் அமர்ந்து கொண்டு ஒருவருடைய பௌலிங் பற்றிப் பேசுவது எளிது”

இதையும் படிங்க: சி.எஸ்.கே அணியின் மாபெரும் சாதனையை சமன் செய்து அசத்திய சன் ரைசர்ஸ் – விவரம் இதோ

“ஆனால் அவர்களுக்கு களத்தில் அப்போதைய நிலவரத்தின் உண்மை தன்மை தெரியாது. விமர்சனம் செய்வதற்கு முன் அவர்கள் தங்களுடைய சொந்த புள்ளி விவரங்களை பார்க்க வேண்டும். இந்த வருடம் நாங்கள் 2 முறை வெற்றிகரமாக பௌலிங் செய்து இலக்கை கட்டுப்படுத்தியுள்ளோம். ஒரு போட்டியில் 10, மற்றொரு போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றோம். அந்த வகையில் எங்கள் மீது நம்பிக்கை வைத்து இக்கட்டான நேரத்தில் பதற்றத்தைப் பிடித்து முக்கிய விக்கெட்டை எடுக்க முயற்சிக்கிறோம்” என்று கூறினார்.

- Advertisement -