நீங்க என்ன குழந்தையா? பேசாம அந்த இளம் வீரருக்கு சான்ஸ் கொடுங்க.. தாக்கூரை விளாசிய சாஸ்திரி

- Advertisement -

தென்னாபிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதனால் 1 – 0* (2) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ள இந்தியா வரலாற்றில் முதல் முறையாக தெனாப்பிரிக்க மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைக்க வேண்டும் என்ற கனவை நிஜமாக்க தவறியுள்ளது.

இந்த போட்டியில் பேட்டிங் துறையில் கேஎல் ராகுல், விராட் கோலி பந்து வீச்சு துறையில் பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோரை தவிர்த்து ஏனைய வீரர்களும் சுமாராக செயல்பட்டது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக காயமடைந்து வெளியேறிய முகமது ஷமிக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற அறிமுக வீரர் பிரசித் கிருஷ்ணா ரன்களை வாரி வழங்கி முதல் போட்டியிலேயே தோல்விக்கு காரணமாக அமைந்தார்.

- Advertisement -

குழந்தை கிடையாது:
அவரை விட மற்றொரு அனுபவ வீரர் சர்துள் தாக்கூர் இம்முறை எந்த மேஜிக்கும் நிகழ்த்தாமல் லோக்கல் பவுலரை போல பந்து வீசியது தோல்வியை கொடுத்தது. இந்நிலையில் சர்துள் தாக்கூர் குழந்தை பவுலர் கிடையாது என்று விமர்சிக்கும் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தென்னாப்பிரிக்க மண்ணில் அசத்துவதற்கு அர்ஷிதீப் சிங் போன்ற ஸ்விங் செய்யக்கூடிய இடதுகை வேகப்பந்து வீச்சாளர் தேவை என கூறியுள்ளார்.

எனவே அர்ஷிதீப் சிங்கை ரஞ்சி கோப்பையில் விளையாட வைத்து வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் ஓரளவு அனுபவத்தை கொண்டவர்கள். இந்த போட்டியில் முகமது ஷமி இல்லாதது பெரிய குறையாக இருந்தது. ஆம் சர்துள் தாக்கூரிடம் அனுபவம் இருக்கிறது”

- Advertisement -

“ஓரளவு நல்ல அனுபவத்தை கொண்டுள்ள அவர் குழந்தை பவுலர் கிடையாது. ஆனால் அவர் உங்களின் சரியான 3வது வேகப்பந்து வீச்சாளர் கிடையாது. வெளிநாட்டுப் போட்டிகளில் மழை பெய்யக்கூடிய ஈரப்பதமான சூழ்நிலைகளில் உங்களுக்கு முழுமையான 3வது வேகப்பந்து வீச்சாளர் தேவை. இந்த நேரத்தில் நீங்கள் அர்ஷிதீப் முதல் தர புள்ளி விவரங்களை பார்க்க வேண்டும். அவரால் நீண்ட நேரம் பந்து வீச முடியுமா? ரஞ்சிக் கோப்பையில் விளையாடியுள்ளாரா? அவரை முதல் தர கிரிக்கெட்டில் அதிகமாக விளையாட வையுங்கள்”

இதையும் படிங்க: உங்களுக்குள்ளேயே ஜோக் பண்றிங்களா? ஒர்க்லோட்ன்னு சொல்லாதீங்க.. இந்திய அணியை விளாசிய கவாஸ்கர்

“ஏனெனில் அவர் இந்திய அணியின் கலவையில் இருப்பதை விரும்புகிறேன். குறிப்பாக நடைபெற்று முடிந்த தென்னாப்பிரிக்க வெள்ளைப் பந்து தொடரில் ஸ்விங் செய்தது போல் அவரால் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அசத்த முடியும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்த தொடரை குறைந்தபட்சம் சமன் செய்வதற்கு கடைசி போட்டியில் இந்தியா வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement