அவரோட விக்கெட்டை எடுத்துட்டேன். வேற என்ன வேணும். நான் ரொம்ப ஹேப்பி – ஷர்துல் தாகூர் மகிழ்ச்சி

thakur 2
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்காம் நகரில் ஆகஸ்ட் 4ஆம் தேதி துவங்கியது. இந்த போட்டியின் முதல் நாளில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங் தேர்வு செய்ய இங்கிலாந்து அணி நிலையான ரன் குவிப்பில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் அசத்தலான பந்து வீச்சினை வெளிப்படுத்தி இருந்தனர்.

Kohli

- Advertisement -

இதன் காரணமாக 65.4 ஓவர்களில் 183 ரன்களுக்கு இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் ஜோ ரூட் 64 ரன்களும், ஜானி பேர்ஸ்டோ 29 ரன்களும் குவித்தனர். இந்திய அணியின் சார்பாக அனுபவ வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா 4 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

இளம் வீரர்களான முகமது சிராஜ் ஒரு விக்கெட்டையும், ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினர். அதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி தனது முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன் எடுத்திருந்தது.

Thakur 1

இந்நிலையில் போட்டி முடிந்து முதல்நாள் ஆட்டம் குறித்து பேட்டியளித்த வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாகூர் கூறுகையில் : இந்த போட்டியில் ஜோ ரூட் விக்கெட்டை கைப்பற்றியது மிகவும் முக்கியமானது. அவர் சிறப்பாக ஆடத் தொடங்கி விட்டால் அவரை வீழ்த்துவது கடினம். அப்படி அவரை நான் வீழ்த்தியது எனக்கு மகிழ்ச்சி. அவரின் விக்கெட் எனக்கு மிகப்பெரிய விக்கெட்.

thakur

ஆடுகளத்தை பார்த்தால் நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் பயனில்லை என்று நினைத்தோம். ஆனால் இங்கு உள்ள சூழ்நிலை மற்றும் தட்பவெப்பம் ஆகியவை பந்துவீச்சாளர்களுக்கு உதவுகிறது. இந்த மைதானத்தில் டியூக் பந்தில் பந்து வீசுவதில் மகிழ்ச்சி என தனது கருத்துக்களை ஷர்துல் தாகூர் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement