பாண்டியாவுக்கு கேக் ஊட்டி வாழ்த்திய கம்பீர்.. அட்டகாசமான கேட்ச் பிடித்த விக்கெட்டை பரிசளித்த தாக்கூர்

Thakur Catch
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 11ஆம் தேதி மதியம் 2 மணிக்கு தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 9வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு இப்ராகிம் ஜாட்ரான் ஆரம்பத்திலேயே 22 ரன்களில் பும்ரா வேகத்தில் ஆட்டமிழந்தார்.

அந்த நிலைமையில் மறுபுறம் நிதானமாக விளையாட முயற்சித்த ரஹ்மத்துல்லா குர்பாஸ் 21 ரன்களில் இருந்த போது ஹர்திக் பாண்டியா வீசிய 13வது ஓவரின் 4வது பந்தில் சிக்ஸர் அடிக்க முயற்சித்தார். இருப்பினும் சரியாக டைமிங் செய்ய தவறியதால் சற்று குறைவான உயரத்தில் வந்த அந்த பந்தை பவுண்டரி எல்லையில் நின்று கொண்டிருந்த சர்தூள் தாக்கூர் சரியாகக் கணித்து கேட்ச் பிடித்தார்.

- Advertisement -

சிறப்பான கேட்ச்:
இருப்பினும் அந்த சமயத்தில் பேலன்ஸ் செய்ய முடியாமல் பவுண்டரியை நோக்கி தம்மை அறியாமலேயே சென்ற அவர் உடனடியாக பந்தை மைதானத்திற்குள் காற்றில் தூக்கி போட்டார். அதைத்தொடர்ந்து நொடி பொழுதில் பவுண்டரி எல்லைக்குள் சென்று விட்டு மீண்டும் களத்திற்குள் வந்து கூலான கேட்ச் பிடித்த அவர் ரசிகர்கள் மற்றும் இந்திய வீரர்களின் பாராட்டுகளை அள்ளினார்.

குறிப்பாக இன்று தம்முடைய 30வது பிறந்தநாளை கொண்டாடிய ஹர்திக் பாண்டியாவுக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிர்வாகம் சார்பில் போட்டி துவங்குவதற்கு முன்பாக கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்தனர். அப்போது கௌதம் கம்பீர் இந்தியாவின் முதன்மை ஆல் ரவுண்டராக திகழும் பாண்டியாவுக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில் களத்தில் தாக்கூர் சிறப்பான கேட்ச் பிடித்து விக்கெட்டை பரிசாக கொடுத்தார் என்று சொல்லலாம்.

- Advertisement -

அது போக போட்டியில் அஸ்வினுக்கு பதிலாக தேர்வு செய்யப்பட்டதற்கு நிறைய விமர்சனங்கள் எழுந்த நிலையில் அதற்கும் பதிலடி கொடுக்கும் வகையில் அடுத்த சில ஓவர்களில் தாக்கூர் அடுத்ததாக வந்த ரஹீல் ஷா’வை 16 ரன்களில் அவுட்டாக்கி அசத்தினார். அதனால் 63/3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய ஆப்கானிஸ்தானுக்கு அடுத்ததாக நங்கூரமாக விளையாடிய கேப்டன் ஷாஹிதியுடன் இணைந்த ஓமர்சாய் 4வது விக்கெட்டுக்கு 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார்.

இருப்பினும் அப்போது பாண்டியா வேகத்தில் 62 ரன்களில் போல்டாகி அவர் பெவிலியன் திரும்பினார். இறுதியில் கேப்டன் சாகிதி 80 ரன்கள் எடுத்த போதிலும் இதர வீரர்கள் அதிரடி காட்ட தவறியதால் 50 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் 272/8 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் பும்ரா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

Advertisement