தென்னாப்பிரிக்க தொடரோடு ஓரங்கட்டப்பட்ட 32 வயதான இந்திய வீரர் – இனிமேல் இவருக்கு சேன்ஸ் கிடைப்பது கஷ்டம்தான்

Shardul-Thakur
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் ஜனவரி 25-ஆம் தேதி முதல் துவங்க இருக்கிறது. அதற்கு முன் தற்போது இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. இந்த தொடரின் முதல் டி20 போட்டி முடிவடைந்த வேளையில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இவ்வேளையில் இந்த டி20 தொடர் முடிவதற்கு முன்பாகவே இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி நேற்று ஜனவரி 12-ஆம் தேதி பிசிசிஐ-யின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

ரோகித் சர்மா தலையை தலைமையில் மொத்தம் 16 பேர் கொண்ட அணியின் முழு பட்டியலும் வெளியாகி இருந்தது. அதில் 32 வயதான இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் இதுவரை 11 டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளார்.

பந்துவீச்சில் சற்று சுமாராக செயல்படும் ஷர்துல் தாகூர் பின்வரிசையில் பேட்டிங்கில் கை கொடுப்பார் என்பதன் அடிப்படையிலேயே அவருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தென்னாப்பிரிக்க மண்ணில் அண்மையில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரின் போது முதல் போட்டியில் அவரது செயல்பாடு மிகவும் மோசமாக இருந்தது.

- Advertisement -

அவரது இந்த மோசமான செயல்பாடு அனைவரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் அணி நிர்வாகம் அவர்மீது இருந்த நம்பிக்கையை இழந்ததாகவும் தெரிகிறது. எனவே இனியும் அவரை டெஸ்ட் அணியில் வைத்திருப்பது தேவையில்லாத ஒன்று என்று கருதியே அவர் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து கழட்டி விடப்பட்டுள்ளார் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : இந்தியாவுக்காக அதை செய்ய தயார்.. ஐசிசி தொடரில் சந்திக்கும் தோல்வியை நிறுத்த.. யுவி வெளியிட்ட அறிவிப்பு

எனவே நிச்சயம் இனிவரும் டெஸ்ட் தொடர்களிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்க வழியே இல்லை என்று தெரிகிறது. வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக பார்க்கப்படும் ஷர்துல் தாகூர் பேட்டிங்கில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஓரளவில் கை கொடுத்து இருந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை மிகவும் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி உள்ளதால் அவரை இனி டெஸ்ட் கிரிக்கெட்டில் பார்ப்பது கடினம் என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement