4 வருஷமா சி.எஸ்.கே அணிக்காக பண்ண அந்த விஷயத்தை இந்த மேட்ச்ல பண்ணேன் – ஷர்துல் தாகூர் மகிழ்ச்சி

Thakur
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் இறுதி டி20 போட்டியானது நேற்று கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 65 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 35 ரன்களும் குவித்தனர்.

venky

- Advertisement -

அதனைத் தொடர்ந்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக 17 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் தோல்வி அடைந்து இந்த தொடரை முழுவதுமாக இந்திய அணியின் வசம் இழந்தது. இந்நிலையில் இந்த மூன்றாவது போட்டியின் போது இந்திய அணியில் இடம் பிடித்த ஷர்துல் தாகூர் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

முதல் 2 போட்டிகளிலும் வாய்ப்பு கிடைக்காத அவர் இந்த மூன்றாவது போட்டியில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு 4 ஓவர்கள் பந்துவீசி 33 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதிலும் குறிப்பாக டெத் ஓவர்களில் அவர் பந்து வீசிய விதம் அனைவரையும் கவர்ந்தது.

thakur 1

குறிப்பாக 20 ஓவரில் அவர் ஏகப்பட்ட வேறியஷன்களுடன் பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் வகையில் பந்து வீசினார். இந்நிலையில் அவரது இந்த கடைசி ஓவர் குறித்து பேசிய தாகூர் கூறுகையில் : நான் கடந்த 4 ஆண்டுகளாக சிஎஸ்கே அணிக்காக என்ன செய்தானோ அதையே தான் இந்திய அணிக்காக செய்தேன். நான் சிறப்பாக பந்து வீசியதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

- Advertisement -

உலக கோப்பை தொடருக்கு ஐந்து மாதங்கள் மட்டுமே இடைவெளி உள்ள வேளையில் இப்படி ஒரு பந்து வீச்சை வழங்கியது நிறைவாக இருக்கிறது. ஒரு பந்து வீச்சாளராக நான் எந்தக் கட்டத்திலும் பந்து வீசத் தயாராக இருக்க வேண்டும். அந்த வகையில் டெத் ஓவர்களில் பந்து வீச நான் தயாராக இருப்பதாக நினைக்கிறேன். ஏனெனில் எந்த சூழ்நிலையிலும் பந்துவீசும் போது நம்முடைய வெறியேஷன்களை காண்பிக்க வேண்டியது அவசியம்.

இதையும் படிங்க : ரோஹித்துக்கு பின் இந்திய அணியின் வருங்கால கேப்டன் இந்த 3 பேரில் ஓருவர்தான் – இந்திய நிர்வாகம் முடிவு

அதேபோன்று கடைசி கட்டத்தில் பந்துவீசும் போது ரன்கள் செல்லும் அவ்வாறு ஒரு பவுன்டரியோ அல்லது சிக்சரோ சென்றால் கூட நாம் அடுத்த பந்து வீசும் மனநிலைக்கு தயாராகவேண்டும். இந்த போட்டியில் வொயிடு யார்க்கர் மற்றும் ஸ்லோ யார்க்கர் போன்றவற்றை பயன்படுத்தினேன் என்று தனது பந்து வீச்சு குறித்து தாகூர் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement