ரஞ்சிக் கோப்பை 2024 – 25 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சுற்று நடைபெற்று வருகிறது. அதில் மும்பையில் எலைட் குரூப் ஏ பிரிவின் ஒரு லீக் போட்டியில் மும்பை மற்றும் ஜம்மு காஷ்மீர் அணிகள் மோதி வருகின்றன. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய மும்பை சுமாராக விளையாடி 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. 10 வருடங்கள் கழித்து விளையாடிய இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 3, ஜெய்ஸ்வால் 4, கேப்டன் ரஹானே 14, ஸ்ரேயாஸ் ஐயர் 11, சிவம் துபே 0 ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே பின்னடைவை கொடுத்தார்கள். அதனால் 47-7 என தடுமாறிய மும்பை 100 ரன்கள் கூட தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது.
தாகூர் அபாரம்:
அப்போது தில்லாக விளையாடிய சர்துல் தாக்கூர் அட்டகாசமான அரை சதத்தை அடித்து 51 (57), தானுஷ் கோட்டியான் 26 ரன்கள் அடித்து ஓரளவு காப்பாற்றினர். ஜம்மு காஷ்மீர் அணிக்கு அதிகபட்சமாக உமர் நசீர் 4, யுவ்திர் சிங் 4 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அடுத்ததாக களம் இறங்கிய ஜம்மு காஷ்மீர் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி 206 ரன்கள் குவித்து முன்னிலை பெற்றது.
அதிகபட்சமாக சுபம் கஜ்ரியா 53, அபித் முஸ்தக் 44 ரன்கள் எடுத்தார்கள். மும்பைக்கு அதிகபட்சமாக சர்துல் தாக்கூர் 2, சம்ஸ் முலானி 2, மோஹித் அவஸ்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்கள். பின்னர் 86 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய மும்பைக்கு 53 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ரோஹித் சர்மா 28, ஜெய்ஸ்வால் 26 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தார்கள்.
லார்ட் தாகூர் மிரட்டல்:
ஆனால் மிடில் ஆர்டரின் ஹர்தித் தோமர் 1, கேப்டன் ரஹானே 16, ஸ்ரேயாஸ் ஐயர் 17, சிவம் துபே 0, சாம்ஸ் முலானி 4 ரன்களில் அவுட்டாகி மெகா ஏமாற்றத்தை கொடுத்தார்கள். அதனால் 101-7 என சரிந்த மும்பை 150 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது மீண்டும் ஜோடி சேர்ந்த தாக்கூர் – தானுஷ் ஜோடி அபாரமாக விளையாடி மும்பையை தூக்கி நிறுத்தியது.
இதையும் படிங்க: இந்த 2 காரணத்தால் தான்.. சாம்பியன்ஸ் ட்ராபியில் சாம்சன் இடத்தை பண்ட் பிடிச்சுட்டாரு.. டிகே வெளிப்படை
அதில் மீண்டும் அரை சதத்தை அடித்த தாக்கூர் நேரம் செல்ல செல்ல அட்டகாசமாக விளையாடி சதத்தை அடித்தார். 2021 லார்ட்ஸ், காபா போன்ற வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அவரை தற்சமயத்தில் அஜித் அகர்கர், கெளதம் கம்பீர் கழற்றி விட்டுள்ளார்கள். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அசத்திய தாக்கூர் 113* (119), கோட்டியான் 58* (119) ரன்கள் எடுத்துள்ளார்கள். அதனால் இரண்டாவது நாள் முடிவில் 274-7 ரன்கள் எடுத்துள்ள மும்பை 188 ரன்களை முன்னிலை பெற்று வெற்றிக்கு போராடி வருகிறது.



