ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்ட அந்த அணியில் சுப்மன் கில் துணை கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டது விமர்சனங்களை எழுப்பியது. அதே போல சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டதும் சில ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஏனெனில் ஒருநாள் கிரிக்கெட்டில் பண்ட் எப்போதும் தொடர்ச்சியாக அசத்தியதில்லை. சொல்லப்போனால் 31 ஒருநாள் போட்டிகளில் அவர் 871 ரன்களை 33.50 என்ற சராசரியில் மட்டுமே எடுத்துள்ள அவர் சுமாராக விளையாடியுள்ளார். மறுபுறம் சாம்சன் 14 இன்னிங்ஸில் 510 ரன்களை 56.65 என்ற நல்ல சராசரியில் எடுத்து அசத்தியுள்ளார்.
ஒரே காரணம்:
இது போக சமீபத்திய வங்கதேசம் மற்றும் தென்னாபிரிக்க டி20 தொடர்களில் அடுத்தடுத்த சதங்களை அடித்த அவர் நல்ல ஃபார்மில் இருக்கிறார். அப்படி இருந்தும் அவருக்கு வாய்ப்பு கிடைக்காதது நிச்சயமாக ஏமாற்றமான முடிவாக இருக்கும் என்றே சொல்லலாம். இந்நிலையில் மிடில் ஆர்டரில் இடதுகை பேட்ஸ்மேன் வேண்டும் என்பதற்காகவே சாம்சனுக்கு பதில் பண்ட் தேர்வு செய்யப்பட்டிருக்கலாம் என்று முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
அது போக விஜய் உள்ளூர் ஒருநாள் தொடரில் கேரள அணிக்காக விளையாடாமல் புறக்கணித்ததும் சஞ்சு சாம்சன் இடத்தை ரிஷப் பண்ட் பிடிக்க காரணமாக அமைந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி தினேஷ் கார்த்திக் பேசியது பின்வருமாறு. “இது நடக்க வேண்டியதாக இருந்தது அல்லவா? ரிஷப் பண்ட் அல்லது சாம்சன் ஆகியோரில் ஒருவர் விளையாடுவார்கள் என்ற நிலைமை இருந்தது”
டிகே வெளிப்படை:
“அவர்கள் இருவரையும் நீங்கள் முழு நேர பேட்ஸ்மேனாகவும் பார்க்க முடியும். ஆனால் பேட்டிங் வரிசையில் இடது கை பேட்ஸ்மேன் வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக ரிசப் பண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சாம்சனும் அந்த இடத்தை மிகவும் நெருங்கினார். இருப்பினும் விஜய் ஹசாரே கோப்பையில் அவர் விளையாடவில்லை. அதுவும் இந்த தேர்வில் முக்கிய பங்காற்றி இருக்கும் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: 12 விக்கெட்ஸ்.. 94க்கு ஆல் அவுட்.. ஜொலித்த ஒரே நட்சத்திரம்.. தனியாளாக ரிஷப் பண்ட் அணியை ஊதி தள்ளிய ஜடேஜா
இந்த நிலையில் சஞ்சு சாம்சன் தற்போதைய இங்கிலாந்து டி20 தொடரில் தொடர்ந்து விளையாடி வருகிறார். அடுத்ததாக அவர் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக விளையாட உள்ளார். மறுபுறம் ரஞ்சிக் கோப்பையில் விளையாடும் பண்ட் அடுத்த இங்கிலாந்து ஒருநாள் தொடர் மற்றும் சா



