12 விக்கெட்ஸ்.. 94க்கு ஆல் அவுட்.. ஜொலித்த ஒரே நட்சத்திரம்.. தனியாளாக ரிஷப் பண்ட் அணியை ஊதி தள்ளிய ஜடேஜா

Ravindra Jadeja
- Advertisement -

ரஞ்சிக் கோப்பை 2024 – 25 உள்ளூர் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சுற்று நடைபெற்று வருகிறது. அதில் ராஜ்கோட் நகரில் ஜனவரி 23ஆம் தேதி எலைட் குரூப் டி பிரிவில் சௌராஷ்ட்ரா மற்றும் டெல்லி அணிகள் மோதிய போட்டி துவங்கியது. அந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய டெல்லி முதல் இன்னிங்ஸில் போராடி 188 ரன்கள் எடுத்தது. நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அதிகபட்சமாக கேப்டன் ஆயுஷ் படோனி 60, யாஷ் துள் 44 ரன்கள் எடுத்தார்கள். சௌராஷ்ட்ரா அணிக்கு நம்பிக்கை நட்சத்திரம் ரவீந்திர ஜடேஜா 5, தர்மேந்திர சிங் ஜடேஜா 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினர்.

- Advertisement -

ஜடேஜா அபாரம்:

அதற்கடுத்ததாக களம் இறங்கிய சௌராஷ்ட்ரா தங்களுடைய முதல் இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 271 ரன்கள் குவித்து முன்னிலை பெற்று அசத்தியது. அந்த அணிக்கு அதிகபட்சமாக தேசாய் 93, வசவாடா 62 ரன்கள் எடுத்தார்கள். நம்பிக்கை நட்சத்திரம் ரவீந்திர ஜடேஜா அதிரடியாக 38 (36) ரன்கள் எடுத்து தாக்கத்தை ஏற்படுத்தினார்.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணியை ரவீந்திர ஜடேஜா தனியாளாக சுருட்டி வீசினார் என்று சொல்லலாம். ஏனெனில் ராணா 12, சங்வான் 6, சித்து 4, ரிஷப் பண்ட் 17 என முக்கிய வீரர்களை ஜடேஜா சொற்ப ரன்களில் காலி செய்தார். அத்துடன் அதிகபட்சமாக 44 ரன்கள் குவித்து போராடிய கேப்டன் படோனியையும் ரன்களுக்கு பெவிலியன் அனுப்பிய அவர் மொத்தம் 12.2 ஓவரில் 38 ரன்கள் மட்டும் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

- Advertisement -

ஜொலித்த ஜடேஜா:

அவருடைய அற்புதமான பவுலிங் காரணமாக டெல்லியை வெறும் 94 ரன்களுக்கு சௌராஷ்ட்ரா சுருட்டியது. இறுதியில் 12 ரன்களை துரத்திய சௌராஷ்ட்ராவை ஹார்விக் தேசாய் 6*, வசவடா 8* ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்கள். இந்த வெற்றிக்கு மொத்தம் 12 விக்கெட்டுகள், 38 ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றிய ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இதையும் படிங்க: இந்தியா – இங்கிலாந்து 2வது டி20 நடைபெறும் சென்னை மைதானம் எப்படி? புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

தற்போது நடைபெறும் இரண்டாவது சுற்றில் ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், சுப்மன் கில் உள்ளிட்ட நட்சத்திர இந்திய வீரர்கள் சுமாராக விளையாடி ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனால் ரவீந்திர ஜடேஜா மட்டுமே ஆல் ரவுண்டராக அசத்தி தம்முடைய அணியை வெற்றி பெற வைத்துள்ளார். அந்த வகையில் தற்போதைய இந்திய அணியில் ரஞ்சிக் கோப்பை போட்டியில் களமிறங்கிய இந்திய வீரர்களின் ஜடேஜா மட்டுமே நட்சத்திரமாக ஜொலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement