இந்தியா – இங்கிலாந்து 2வது டி20 நடைபெறும் சென்னை மைதானம் எப்படி? புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

Cheapauk Stadium
- Advertisement -

இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரில் கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து இரண்டாவது போட்டியில் வெற்றி வெற்று முன்னிலையை அதிகரிக்க இந்திய அணி தயாராகியுள்ளது.

மறுபுறம் முதல் போட்டியில் பேட்டிங்கில் சொதப்பிய இங்கிலாந்து இரண்டாவது போட்டியில் முன்னேறி வெற்றி கண்டு தொடரை சமன் செய்ய முயற்சிக்க உள்ளது. அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் போட்டி ஜனவரி 25ஆம் தேதி இரவு 7 மணிக்கு தமிழகத்தின் தலைநகர் சிங்கார சென்னையில் உள்ள சேப்பாக்கத்தில் இருக்கும் எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

- Advertisement -

சிங்கார சென்னை:

கடந்த 1910இல் தோற்றுவிக்கப்பட்டு 1934 முதல் சர்வதேச போட்டிகளை நடத்தி வரும் சேப்பாக்கம் மைதானத்தில் 2012 முதல் டி20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 38000 ரசிகர்கள் அமரக்கூடிய வகையில் நவீன வசதிகளை கொண்ட இம்மைதானத்தில் இதுவரை நடைபெற்ற 2 சர்வதேச டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ள இந்தியா ஒரு வெற்றி ஒரு தோல்வியை சந்தித்துள்ளது. இங்கிலாந்து அணியை இப்போது தான் முதல் முறையாக இந்த மைதானத்தில் இந்தியா எதிர்கொள்ள உள்ளது.

வெதர் ரிப்போர்ட்:

சேப்பாக்கம் நகரில் ஜனவரி 25ஆம் தேதி மழை பெய்வதற்கு வாய்ப்பு இல்லை என்று சென்னை வானிலை மையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. வானம் லேசான மேகமூட்டத்துடன் மட்டுமே காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இப்போட்டி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம்.

- Advertisement -

பிட்ச் ரிப்போர்ட்:

சேப்பாக்கம் பிட்ச் ஐபிஎல் தொடரில் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருந்து வருகிறது. இருப்பினும் சமீபத்தில் மைதானம் புதிதாக கட்டமைக்கப்பட்ட போது பேட்டிங் செய்வதற்கு சாதகமாக பிட்ச் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. எனவே நிலைமையை உணர்ந்து விளையாடும் பேட்ஸ்மேன்கள் நல்ல ரன்களை குவிக்க முடியும். அதே போல ஸ்பின்னர்கள் மிடில் ஓவர்களில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.

இதையும் படிங்க: பிசிசிஐ விதிமுறையால் விராட் கோலிக்கு தான் அதிக பிரச்சனை.. இதெல்லாம் தேவையா? ப்ராட் ஹோக் அதிருப்தி

இரவு நேரத்தில் போட்டி நடைபெறுவதால் வேகப்பந்து வீச்சாளர்கள் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இங்கு சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 174 ஆகும். வரலாற்றில் இங்கு நடைபெற்ற போட்டிகளில் தலா 1 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும் சேசிங் செய்த அணியும் வென்றுள்ளன. அதனால் டாஸ் வெல்லும் கேப்டன் பனியின் தாக்கத்தை கருத்தில் கொண்டு முதலில் பவுலிங் செய்து நன்றாக செயல்படுவது வெற்றியை கொடுக்கலாம்.

Advertisement