ஒன்மேன் ஆர்மி பும்ரா இந்தியாவை கீழே விடல.. கோலி ஃபார்முக்கு திரும்ப இதை சொல்லுங்க போதும்.. சோயப் அக்தர்

Shoaib Akhtar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சமீபத்திய டெஸ்ட் போட்டிகளில் சுமாராக விளையாடினார். அவருடைய சுமாரான ஆட்டம் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தோல்வியை சந்திக்க முக்கிய காரணமானது. அதே காரணத்தால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் முறையாக இந்திய அணி தகுதி பெறாமல் வெளியேறியது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்தது.

அதனால் விராட் கோலியை இந்திய ரசிகர்களே விமர்சித்தார்கள் என்று சொல்லலாம். இதைத்தொடர்ந்து ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. அந்த தொடரில் விராட் கோலி அசத்துவதற்காக போராட உள்ளார். இந்நிலையில் விராட் கோலி ஃபார்முக்கு திரும்புவதற்கு அடுத்ததாக பாகிஸ்தானுடன் விளையாடப் போகிறோம் என்று மட்டும் சொல்லிப் பாருங்கள் என சோயப் அக்தர் கலகலப்பாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

விராட் கோலியை எழுப்ப:

ஏனெனில் 2022 டி20 உலகக் கோப்பை உட்பட பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி பெரும்பாலும் சிறப்பாக விளையாடியதாக அவர் பாராட்டியுள்ளார். மேலும் ஜஸ்ப்ரித் பும்ரா காயத்தை சந்தித்தாலும் கடந்த ஆஸ்திரேலிய தொடரில் இந்தியாவை கீழே விடவில்லை என்றும் அக்தர் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலியை நீங்கள் தட்டி எழுப்ப விரும்பினால் அவரிடம் பாகிஸ்தானுக்கு எதிராக போட்டி இருக்கிறது என்று மட்டும் சொல்லுங்கள்”

“மெல்போர்ன் மைதானத்தில் அவர் விளையாடிய ஆட்டத்தை மட்டும் பாருங்கள். அதேபோன்று ஆட்டத்தை பாகிஸ்தானுக்கு பாபர் அசாம் நிகழ்த்துவார் என்று நம்புகிறேன். துரதிஷ்டவசமாக சாய்ம் ஆயுப் காயத்தை சந்தித்துள்ளார். அவருடன் ஃபகார் ஜமான் துவக்க வீரராக சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன். அது அடித்து நொறுக்கக்கூடிய ஓபனிங் ஜோடியாக இருக்கும்”

- Advertisement -

ஒன்மேன் ஆர்மி:

“இம்முறை வெல்வதற்கு இந்தியா – பாகிஸ்தான் ஆகிய 2 அணிகளுக்குமே வாய்ப்புள்ளது. துபாயில் இம்முறை அதிக ரன்கள் அடிக்கப்படும் போட்டியை நான் எதிர்பார்க்கிறேன். இரு அணிகளுமே விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இதுவாகும். ஆனால் இம்முறை பாகிஸ்தான் வெல்லும் என்ற நம்புகிறேன். தொடரை நடத்தும் அவர்கள் கோப்பையுடன் வீடு திரும்ப வேண்டும்”

இதையும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டதற்கு – இவங்க 2 பேர்தான் காரணமாம்

“அதே சமயம் இந்தியாவும் வலுவான அணி. பும்ரா அவர்களுடைய ஒன் மேன் ஆர்மி. அவர் நேர்மையான வேகப்பந்து வீச்சாளர் என்பதே பும்ராவை பற்றி நான் விரும்பும் சிறந்த விஷயமாகும். அவர் தன்னுடைய முதுகில் காயத்தை சந்தித்தாலும் இந்தியாவை கீழே விடவில்லை” என்று கூறினார். இந்த நிலையில் காயத்தால் பும்ரா சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவாரா என்பது சந்தேகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement