சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டதற்கு – இவங்க 2 பேர்தான் காரணமாம்

IND
- Advertisement -

பாகிஸ்தான் மற்றும் துபாய் நாட்டில் நடைபெறவுள்ள ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் மார்ச் 9-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதே வேளையில் இந்த தொடருக்கான போட்டி அட்டவணைகளும் ஏற்கனவே வெளியாகிவிட்டன.

இந்திய அணி அறிவிக்கப்படுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் :

அதன்படி குரூப் ஏ பிரிவில் – இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய அடிகளும், பி பிரிவில் – ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பிடித்துள்ளன. இந்த தொடரின் குரூப் சுற்று பிரிவில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதும்.

- Advertisement -

அதன்பிறகு லீக் சுற்றின் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கும், அரையிறுதியில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும் வகையில் அட்டவணை வகுக்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் ஜனவரி 12-ஆம் தேதிக்குள் தங்களது 15 பேர் கொண்ட அணியை அறிவிக்க வேண்டும் என்று ஐசிசி கெடு வித்திருந்தது.

ஆனால் இந்திய அணி இன்னும் தங்களது அணியை அறிவிக்காமல் தாமதம் காட்டி வருகிறது. அதோடு தங்களது அணியை அறிவிக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டிய ஐசிசி-யிடம் முறையிட்டிருந்தது. இந்நிலையில் இப்படி இந்திய அணி தங்களது அணியை இதுவரை அறிவிக்காமல் இருக்க இரண்டு முக்கிய வீரர்கள் காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் அந்த இரண்டு வீரர்கள் யாரெனில் :

- Advertisement -

ஒன்று வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, மற்றொன்று சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தான். ஏனெனில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த சிட்னி டெஸ்ட் போட்டியின் போது பும்ராவிற்கு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது. அதேபோன்று குல்தீப் யாதவிற்கு கடந்த ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது.

இதையும் படிங்க : பும்ராவை கேப்டனாக்க தயங்கும் பி.சி.சி.ஐ.. அதற்கான முக்கிய 2 காரணங்கள் இதுதான் – விவரம் இதோ

இவர்கள் இருவருமே சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியின் முக்கிய வீரர்களாக பார்க்கப்படும் வேளையில் அவர்களது உடற்தகுதியை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் உள்ளனர். ஒருவேளை அவர்கள் உடற்தகுதியை நிரூபிக்காமல் போனால் அவர்கள் இந்த தொடரில் இடம் பெறாமல் போகலாம். எனவே அவர்களது உடற்தகுதியை கணக்கில் கொண்டே இந்திய அணி அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Advertisement