புஜாரா, ரஹானே இல்லனாலும் அந்த 2 இந்திய வீரர்களை சமாளிப்பது கஷ்டம் – ஷேன் வாட்சன் பேட்டி

Watson
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடருக்கு அடுத்ததாக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய டெஸ்ட் அணியானது நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது.

ஆஸ்திரேலிய மண்ணில் கலக்கப்போகும் வீரர்கள் :

அந்த தொடருக்கு அடுத்து இந்த ஆண்டு இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அப்படி ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது அங்கு நடைபெற உள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த இந்தியா ஆஸ்திரேலியா தொடர் குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் வேளையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான ஷேன் வாட்சன் இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு சவாலாக இருக்கும் இந்திய வீரர்கள் குறித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை பொருத்தவரை இந்திய அணியின் பேட்டிங்கில் பெரிய அளவு மாற்றங்கள் செய்யப்படவில்லை.

கடந்த இரண்டு முறை புஜாரா ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பாக விளையாடியிருக்கிறார். தற்போது அவரைப் போன்று விளையாடும் வீரர்கள் இல்லை என்றாலும் தவறே செய்யாமல் சிறப்பாக விளையாடும் பேட்ஸ்மேன்கள் இந்திய அணியிடம் இருக்கின்றனர். குறிப்பாக ஜெய்ஸ்வால் டாப் ஆர்டரில் அதிரடியாக விளையாடியிருந்தார்.

- Advertisement -

அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விரைவாக ரன் குவிக்கும் திறமையை வைத்திருக்கிறார். அதே போன்று மற்றொருபுறம் மீண்டும் டெஸ்ட் பக்கம் திரும்பி உள்ள ரிஷப் பண்ட் பழைய பார்முக்கு வந்துள்ளார். ஏற்கனவே ஆஸ்திரேலிய மண்ணில் அவரால் என்ன செய்ய முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார். இம்முறை நிச்சயம் மேலும் சிறப்பாக விளையாட முயற்சிப்பார்.

இதையும் படிங்க : இங்கிலாந்தால் நெருங்க முடியல.. கில்லியான இந்தியா அந்த ஆஸி பவுலரை நொறுக்குனா கதை முடிஞ்சுது.. மோர்கன்

இப்படி இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் நம்பிக்கையுடன் விளையாடி வருகின்றனர். அதேபோன்று பும்ரா பந்துவீச்சில் அசத்த காத்திருப்பார். ஆஸ்திரேலிய மண் மட்டுமின்றி உலகின் எந்த மைதானத்திலும் சிறப்பாக பௌலிங் செய்யக்கூடிய அவர் எந்த ஒரு பேட்ஸ்மேனையும் வீழ்த்தும் அளவிற்கு திறன் உடையவர் என ஷேன் வாட்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement