இங்கிலாந்தால் நெருங்க முடியல.. கில்லியான இந்தியா அந்த ஆஸி பவுலரை நொறுக்குனா கதை முடிஞ்சுது.. மோர்கன்

Eoin Morgan
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2 – 0 (2) என்ற கணக்கில் வென்றது. குறிப்பாக கான்பூரில் நடைபெற்ற இரண்டாவது போட்டி மழையால் 2 நாட்கள் ரத்து செய்யப்பட்டது. அதனால் டிராவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட அப்போட்டியில் கடைசி 2 நாட்களில் இந்தியா டி20 போல வங்கதேசத்தை சரமாரியாக அடித்து நொறுக்கி வென்றது.

மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகமாக 50, 100, 150, 200, 250 ரன்களை குவித்த அணியாகவும் இந்தியா 5 உலக சாதனைகளை படைத்தது. அதனால் பாகிஸ்தானை போல வீழ்த்துவோம் என்று சவால் விட்ட வங்கதேசத்தை தெறிக்க விட்ட இந்தியா தங்களை சொந்த மண்ணில் கில்லி என்பதை நிரூபித்தது. அத்துடன் 2012க்குப்பின் சொந்த மண்ணில் ஒரு தொடரில் கூட தோற்காத வெற்றி நடையை இந்தியா தொடர்கிறது.

- Advertisement -

கில்லி இந்தியா:

இந்நிலையில் 12 வருடங்களாக சொந்த மண்ணில் ஒரு தொடரில் கூட இந்தியா தோற்கவில்லை என முன்னாள் இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன் பாராட்டியுள்ளார். அதனால் மற்ற அணிகளை காட்டிலும் சொந்த மண்ணில் இந்தியா கில்லியாக செயல்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் நேதன் லயனை இந்தியா அடித்து நொறுக்கினால் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவின் கதை முடிந்து விடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஆஸ்திரேலியாவுக்கு சென்று இந்தியா இதே போல விளையாடினால் கதை வேறு மாதிரியாக இருக்கும். அந்தத் தொடரில் நேதன் லயன் ஃபிட்னஸ் மற்றும் அவரை இந்தியா எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது பெரிய அங்கமாக இருக்கும். ஒருவேளை இதே மனநிலையுடன் நேதன் லயனை இந்தியா எதிர்கொண்டால் அது ஆஸ்திரேலியாவிடம் நிறைய கேள்விகளை எழுப்பும்”

- Advertisement -

இங்கிலாந்தால் நெருங்க முடியல:

“இந்தியா தங்களுடைய சொந்த சூழ்நிலைகளில் ஒரு மகத்தான அணியாக கருதப்படுகிறது. அங்கே எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற பசி இருப்பதே அவர்களை வலுவாக்குகிறது. அதைப் பற்றிய அவர்களின் அணுகுமுறையை அவர்கள் ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். சொந்த மண்ணில் அதிக சாதகம் உள்ள நாட்டிலிருந்து நாங்கள் வந்துள்ளோம்”

இதையும் படிங்க: விராட், ரோஹித்தை விட.. அந்த 2 இந்திய வீரர்களை அடக்கலன்னா ஜெய்க்க முடியாது.. ஆஸியை எச்சரித்த வாட்சன்

“ஆனால் தலைமுறை தலைமுறையாக சொந்த மண்ணில் எங்களுடைய வெற்றி விகிதங்கள் இந்தியர்களைப் போல நெருங்க முடியவில்லை” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்தியா சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதை முடித்துக் கொண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு பறக்க உள்ளது குறிப்பிடத்தக்கது

Advertisement